மேலும் அறிய

Virat vs Gambhir Clash: கம்பீரை பார்த்து சவால் விட்டாரா விராட் கோலி...? நடந்தது என்ன?

டிரஸ்சிங் ரூம் வீடியோவில் கவுதம் கம்பீரைப் பார்த்து விராட் கோலி சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

டிரஸ்சிங் ரூம் வீடியோவில் கவுதம் கம்பீரைப் பார்த்து விராட் கோலி சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மிகவும் ஆக்ரோஷமான விராட்:

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பெங்களூர் அணியை கடைசி பந்தில் லக்னோ அணி வீழ்த்தியது. இந்த வெற்றியை  லக்னோ அணி வீரர்கள் மிகவும் ஆரவாரமாக கொண்டாடினர். லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக மைதானத்திற்கு வந்து ஆர்சிபி ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்குமாறு செய்கை செய்தார். இது விராட் கோலியை சீண்டி பார்க்கும் செயலாக பார்க்கப்பட்டது. இதனால் லக்னோ மைதானத்தில் களமிறங்கிய நொடி முதலே விராட் கோலி அதீத ஆக்ரோஷத்துடன் இருந்தார். நவீன உல் ஹக் களத்தில் இருந்த போது, அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் விராட் கோலி ஷூ-வை காட்டினார்.

அமித் மிஸ்ரா, விராட் கோலியை பார்த்து "எதற்காக இவ்வளவு ஆக்ரோஷம், தேவையில்லையே என்பது போல் கேட்டார். அதை ஏற்காத விராட் கோலி, நேரடியாக நடுவர் முன்னிலையில் அமித் மிஸ்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்டம் முடிவடைந்த பின் வீரர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி விடை பெற்றனர். அப்போது விராட் கோலி கை குலுக்கும் போது நவீன்உல்ஹக் அவரது கையை தட்டிவிட்டு  சற்று ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் அவரும் திருப்பி பேச அங்கே மீண்டும் வாக்குவாதம் எழுந்தது. மேக்ஸ்வெல் நவீன் உல் ஹக்கை சமாதானப்படுத்தினார்.  கவுதம் கம்பீருடன் கை குலுக்கும் போதும் விராட் கோலி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

டிரெஸ்சிங் ரூம் மோதல்:

லக்னோ வீரர் மேயர்ஸ் மற்றும் கோலி இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டது போல இருந்தது. இதைத் தொடர்ந்து கம்பீர் தனது அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸை கோலியுடன் பேச வேண்டாம் என்று தடுத்தார். பெங்களூரு அணியினர் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள டிரஸ்சிங் அறைக்குள் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், போட்டிக்குப் பிறகு கம்பீரைப் பற்றி கோலி வெளிப்படையாக பேசுவதை பார்க்க முடிந்தது. 

உங்களால் கொடுக்க முடிந்தால், அதை வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் கொடுக்கவே வேண்டாம் என அந்த வீடியோவில் விராட் கோலி கூறுகிறார். ஐபிஎல் 2023 சீசனில் ஆர்சிபிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு கம்பீர் பெங்களூரு அணியை நோக்கி காட்டிய செய்கையின் எதிரொலி இன்னும் தொடர்கிறது. நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானது என்று கூறும் கோலி, லக்னோவில், லக்னோ அணியை விட எங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்தது என்பது உண்மையில் நம்ப முடியாத உணர்வு. ஒரு அணியாக நாங்கள் எவ்வளவு ரசிகர்கள் மத்தியில் விரும்பப்படுகிறோம் என்பதை இது காட்டுகிறது," என்று வீடியோவில் கோலி கூறுகிறார்.

ஆர்.சி.பி. கேப்டன் கருத்து:

லக்னோவில் கோலிக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இது விராட்டின் சிறந்த சாதனை என்றும் அவர் சிறந்த நிலையில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.  ”நாங்கள் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன், மைதானத்தில் விஷயங்களை அமைதியாக வைத்திருப்பதே எனது வேலை," என்று ஆட்டத்திற்குப் பிறகு டு பிளெசிஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
"ஒட்டுண்ணி காங்கிரஸ்.. டிரைவர் சீட்டுக்காக அடிச்சிக்கிறாங்க" மோடி அட்டாக்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. நன்கொடையாளர்கள் பட்டியலில் நம்மாளுதான் முதலிடம்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. ஒரு நாளுக்கு 6 கோடி நன்கொடை வழங்கும் வள்ளல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
"ஒட்டுண்ணி காங்கிரஸ்.. டிரைவர் சீட்டுக்காக அடிச்சிக்கிறாங்க" மோடி அட்டாக்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. நன்கொடையாளர்கள் பட்டியலில் நம்மாளுதான் முதலிடம்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. ஒரு நாளுக்கு 6 கோடி நன்கொடை வழங்கும் வள்ளல்!
தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
IPL 2025:ஐபிஎல்.. எதற்காக ஏலத்தில் பெயரை கொடுத்தேன் தெரியுமா? ஜேம்ஸ் ஆண்டர்சன் விளக்கம்
IPL 2025:ஐபிஎல்.. எதற்காக ஏலத்தில் பெயரை கொடுத்தேன் தெரியுமா? ஜேம்ஸ் ஆண்டர்சன் விளக்கம்
திமுக என்ற ஆலமரத்தை பிளேடால் வெட்டப் போகிறார்களாம்... துணை முதல்வர் உதயநிதி கொடுத்த பதிலடி
திமுக என்ற ஆலமரத்தை பிளேடால் வெட்டப் போகிறார்களாம்... துணை முதல்வர் உதயநிதி கொடுத்த பதிலடி
தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!
தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!
Embed widget