மேலும் அறிய

CSK vs PBKS: ஐ.பி.எல். ரசிகர்களே.. சேப்பாக்கத்தில் நாளை டிக்கெட் விற்பனை..! சி.எஸ்.கே. - பஞ்சாப் மோதலை பார்க்க ரெடியா?

CSK Match Tickets: சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்(CSK vs PBKS Tickets ) விற்பனை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் சீசன்:

16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

சென்னை அணி முதலிடம்:

தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு தொடரில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடருடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுவதால் அவர் விளையாடும் போட்டியை காண ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலும் சென்னை விளையாடும் போட்டிகளுக்கான, டிக்கெட்டுகள் சில மணி நேரங்களிலேயே மொத்தமாக விற்று தீர்ந்து விடுகின்றன. இந்நிலையில், வரும் 30ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அதற்கான டிக்கெட்கள் நாளை காலை 9.30 முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.

டிக்கெட் எங்கு கிடைக்கும்?

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட், பேடிஎம் மற்றும் www.insider.in எனும் இரண்டு இணையதளங்களிலும், மைதானத்திற்கு வெளியே உள்ள கவுன்ட்டர்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலை விவரங்கள்:

மைதானத்தின் ஐ, ஜே மற்றும் கே ஆகிய ஸ்டேண்ட்களில் கீழ்பகுதியில் உள்ள டிக்கெட் விலை 2500 ரூபாயாக உள்ளது. இந்த வகை டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் கவுன்ட்டரில் கிடைக்கும். சி,டி மற்றும் ஈ ஸ்டேண்ட்களின் மேல் பகுதியில் அமர்ந்து பார்க்கவும், கே.எம்.கே டெரஸில் அமர்ந்து போட்டியை காணவும் டிக்கெட்டுகள் முறையே 3,000 மற்றும் 5ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட  இரண்டு கேலரிகளுக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்.

சி,டி மற்றும் ஈ ஸ்டேண்ட்களின் கீழ்பகுதியில் அமர்ந்து பார்க்கும் டிக்கெட் விலை 1500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் கவுன்ட்டரில் மட்டுமே கிடைக்கும். ஐ, ஜே மற்றும் கே ஆகிய ஸ்டேண்ட்களில் மேல்பகுதியின் டிக்கெட் 2000 ரூபாயாகும். இந்த வகை டிக்கெட் ஆன்லைன் மற்றும் கவுன்ட்டரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் சென்னை அணி:

சேப்பாக்கத்தில் சென்னை அணி நடப்பு தொடரில் இதுவரை சேப்பாக்கத்தில் 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget