IPL MI vs DC : டெல்லியின் கனவை சிதைத்த மும்பை... அடித்தது பெங்களூருவுக்கு லக்!
IPL MI vs DC : ஐ.பி.எல். தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகும் கடைசி அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மும்பையும், டெல்லியும் இன்று மோதுகிறது.
LIVE
Background
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி அணி மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
அதேசமயத்தில், இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் பெங்களூர் அணியுடன் சம புள்ளிகள் பெறும் டெல்லி ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
IPL MI vs DC : டெல்லியின் கனவை சிதைத்த மும்பை... அடித்தது பெங்களூருவுக்கு லக்!
IPL, DC vs MI: பெங்களூருவுக்கு சாதகமாகுமா இந்த போட்டி... மும்பை வெற்றிப்பெற 160 ரன்கள் இலக்கு!
டெல்லி கேபிடல்ஸ் 8 ஓவர்களில் 48 ரன்கள்..!
டெல்லி கேபிடல்ஸ் அணி 8 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
கோல்டன் டக் அவுட்டாகிய மிட்ஷெல் மார்ஷ்..!
டெல்லி அணியின் முக்கிய வீரர் மிட்ஷெல் மார்ஷ் பும்ரா வீசிய பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
முதல் விக்கெட்டை இழந்தது டெல்லி..!
டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால், 3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 21 ரன்களை டெல்லி எடுத்துள்ளது.