MI vs SRH, IPL 2023: மும்பை - ஐதராபாத் மோதல்.. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை வெற்றி யார் பக்கம்?
ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான, போட்டிகளின் முடிவுகள் மற்றும் அதுதொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான, போட்டிகளின் முடிவுகள் மற்றும் அதுதொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மும்பை - ஐதராபாத் அணிகள் மோதல்:
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். இதனிடையே, இந்த இரு அணிகள் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை, 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9 போட்டிகளில் ஐதராபாத் அணியும், ஒரு சூப்பர் ஓவர் வெற்றி உட்பட 10 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய போட்டியில் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி 5 போட்டிகளின் முடிவுகள்:
இரு அணிகளுக்கு இடையே நடந்த கடைசி 5 போட்டிகளில் ஐதராபாத் அணி 2 போட்டியிலும், மும்பை அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றன. அதேநேரம் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 7 போட்டிகளில், ஐதராபாத் அணி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத்தில் எஸ்ஆர்எச் ஆதிக்கம்:
ராஜிவ் காந்தி மைதானத்தில் இதுவரை 46 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 15 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஸ்கோர் விவரங்கள்:
ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர்: 235
மும்பை அணிக்கு எதிராக ஐதராபாத் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர்: 193
ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர்: 87
மும்பை அணிக்கு எதிராக ஐதராபாத் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர்: 96
தனிநபர் சாதனைகள்:
மும்பை அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த ஐதராபாத் அணி வீரர்: டேவிட் வார்னர், 524 ரன்கள்
ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த மும்பை அணி வீரர்: பொல்லார்ட், 431 ரன்கள்
மும்பை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த ஐதராபாத் அணி வீரர்: புவனேஷ்வர் குமார், 17 விக்கெட்டுகள்
ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த மும்பை அணி வீரர்: பும்ரா, 16 விக்கெட்டுகள்
புள்ளி விவரங்கள் மும்பை அணிக்கு சாதகமாக இருந்தாலும், உள்ளூர் மைதானத்தில் ஐதராபாத் அணியின் செயல்பாடு தொடர்ந்து வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.