Watch Video : ஜடேஜாவைப் போலவே பேட்டை சுழற்றிய சாஹல்...! வைரல் வீடியோ உள்ளே..!
ராஜஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சாஹல் வலைப்பயிற்சியின்போது சென்னை வீரர் ஜடேஜாவைப் போலவே பேட்டை சுழற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
15வது ஐ.பி.எல். போட்டித்தொடர் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக வீரர்கள் அனைவரும் ஏலத்தில் எடுக்கப்பட்டு புதிய அணிகள் வருகையுடன் நடப்பு ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக தொடக்கம் முதல் கேப்டனாக இருந்த தோனிக்கு பதிலாக முதன்முறையாக ரவீந்திர ஜடேஜா சென்னைக்கு கேப்டனாக பொறுப்பு ஏற்றுள்ளார். அதேபோல, பெங்களூர் அணியின் தூணாக விளங்கிய யுஸ்வேந்திர சாஹல் ராஜஸ்தான் அணிக்காக இந்த தொடரில் ஆடுகிறார்.
ராஜஸ்தான் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வலைப்பயிற்சியின்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் சாஹல் தனது நண்பரான ஜடேஜாவைப் போலவே பேட்டைச் சுழற்றிக்கொண்டே நடந்து வருகிறார். சாஹல் செய்வதைப் பார்த்த அந்த அணியின் தொடக்க வீரர் பட்லர் ஜடேஜா? தானே என்று சரியாக கூறுகிறார். சாஹல் பயிற்சிக்கு செல்வதற்கு முன்பு சஞ்சு சாம்சன், ஹெட்மயர் ஆகியோரிடம் ரகளை செய்து விட்டும் செல்கிறார். சாஹலின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Head inside the nets with @yuzi_chahal and enjoy the next 121
— Rajasthan Royals (@rajasthanroyals) April 13, 2022
seconds of your life. 🤭💗#RoyalsFamily | #HallaBol | #TATAIPL2022 pic.twitter.com/G01N01sEs2
சாஹல் ராஜஸ்தான் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாகவும், அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டராகவும் உள்ளார். ஜடேஜாவும், சாஹலும் இந்திய அணிக்காக இணைந்து பல்வேறு போட்டிகளில் ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 5 போட்டிகளில் ஆடி 3ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 5 போட்டியில் ஆடி 1 வெற்றி, 4 தோல்விகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க : Watch Video: தண்ணீர் தெளித்து கோலம் வரைந்து புத்தாண்டு கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள் - வைரல் வீடியோ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்