மேலும் அறிய

பஞ்சாப் அணியில் இருந்து பரிமாற்றமாகும் கே.எல். ராகுல்... லக்னோ அணியில் தஞ்சமா...?

பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல். ராகுல் அந்த அணியிலிருந்து பிரிந்து புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ அணியில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போது மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்கள் போல் தொடங்கப்பட்டது. அப்போது இந்தத் தொடரின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள உள்ளூர் திறமை வெளியே கொண்டு வர ஒரு பாலமாக அமையும் என்று கருதப்பட்டது. அதன்படி தொடங்கப்பட்ட ஐபிஎல் இப்போது முழு பிஸினசாகவே பார்க்கப்படுகிறது. 

வழக்கத்தை விட வரும் ஆண்டு இன்னும் சிறப்பாக நடக்கவுள்ளது ஐபிஎல். வரும் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு புது அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் அணியை ஏலத்தில் எடுத்த தொகைகள் பிரம்மிக்க வைத்துள்ளன. அதன்படி ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியையும், சிவிசி நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் எடுத்துள்ளனர். 

பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுலை தக்கவைக்க ஆர்வம் காட்டவில்ல என்று கூறப்படுகிறது. அந்த அணி சார்பில் வெறும் 2 வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. மாயங்க் அகர்வால், ரவி பிஷ்னாய், ஷாரூக் கான் ஆகிய மூவரில் இருவர் தக்கவைக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில், பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல். ராகுல் அந்த அணியிலிருந்து பிரிந்து ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ அணியில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணி சார்பில் 4 பேர் தக்கவைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அடுத்த மூன்று சீசன்களுக்கு தோனி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இருப்பார் என்றும், மொயின் அலி அல்லது சாம் கரணை அணியில் தக்க வைக்க சி.எஸ்.கே.முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அனுபவ வீரர் பிராவோவை சென்னை அணி இம்முறை தக்கவைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது. 

Cricbuzz-இல் வெளியான தகவலின்படி, ஐபிஎல் 2022 வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், முதல்போட்டியிலேயே சென்னை அணியும், மும்பை அணியும் விளையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையென்றால்  கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை களமிறங்கும். இந்த தகவலே சென்னை ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வெளியான தகவலின்படி,  10 அணிகள் இருப்பதால் 74 ஆட்டங்கள் இருக்கலாம் எனகூறப்படுகிறது. இரண்டு மாதங்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஜூன் கடைசியில் இறுதிப்போட்டி இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadi Month 2024: பிறந்தது ஆடி மாதம்! களைகட்டியது அம்மன் கோயில்கள் - காலை முதலே பக்தர்கள் கூட்டம்
Aadi Month 2024: பிறந்தது ஆடி மாதம்! களைகட்டியது அம்மன் கோயில்கள் - காலை முதலே பக்தர்கள் கூட்டம்
Madurai NTK Murder: திருமண உறவால் பிரச்சினை; நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம்!
Madurai NTK Murder: திருமண உறவால் பிரச்சினை; நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம்!
Rasipalan: கும்பத்துக்கு இரக்கம், மீனத்துக்கு  இன்பம் -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு இரக்கம், மீனத்துக்கு இன்பம் - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN politicians death : அடுத்தடுத்த கொலைகள்! திக்..திக்..தமிழகம்Amudha IAS transfer : Kerala News : ”பெட்ரோலுக்கு பணம் கொடுங்க” காரை ஏற்றி கொலை முயற்சி பகீர் CCTV காட்சிPa Ranjith on Armstrong Murder  : ஆம்ஸ்ட்ராங் படுகொலை..தேதி குறித்த பா.ரஞ்சித்..திடீர் அழைப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadi Month 2024: பிறந்தது ஆடி மாதம்! களைகட்டியது அம்மன் கோயில்கள் - காலை முதலே பக்தர்கள் கூட்டம்
Aadi Month 2024: பிறந்தது ஆடி மாதம்! களைகட்டியது அம்மன் கோயில்கள் - காலை முதலே பக்தர்கள் கூட்டம்
Madurai NTK Murder: திருமண உறவால் பிரச்சினை; நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம்!
Madurai NTK Murder: திருமண உறவால் பிரச்சினை; நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம்!
Rasipalan: கும்பத்துக்கு இரக்கம், மீனத்துக்கு  இன்பம் -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு இரக்கம், மீனத்துக்கு இன்பம் - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
Railway; முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் திருநெல்வேலியில் இருந்து  கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் !
Railway: முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் திருநெல்வேலியில் இருந்து  கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் !
Vishnu Vishal next : கவனம் ஈர்த்த விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில்... விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்
Vishnu Vishal next : கவனம் ஈர்த்த விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில்... விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
Embed widget