மேலும் அறிய

IPL2023: பேட்டிங்கில் ருத்ரதாண்டவம்.. கில்லுக்கு ஆரஞ்சு தொப்பி; அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமிக்கு ஊதா நிற தொப்பி

ஆரஞ்சு தொப்பியை பொறுத்தவரையில், அதிகபட்சமாக டேவிட் வார்னர் ஒரே அணிக்காக மூன்று முறை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் எடுக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும் அதிக விக்கெட் எடுக்கும் வீரர்களுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

சுப்மன் கில்லுக்கு ஆரஞ்சு தொப்பி

அந்த வகையில், நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில்லுக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டுள்ளது. 17 போட்டிகளில் 4 அரைசதம், 3 சதம் என நடப்பு தொடரில் 890 ரன்களை எடுத்துள்ளார் கில்.

முகமது ஷமிக்கு பர்பிள் தொப்பி:

அதேபோல, அதிக விக்கெட் எடுத்ததற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது ஷமிக்கு பர்பிள் தொப்பி அளிக்கப்பட்டுள்ளது. 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி. இவர்கள் இருவருக்கும், தலா 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடர் தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் ஆரஞ்சு தொப்பியும் பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டு வருகிறது. ஆரஞ்சு தொப்பியை பொறுத்தவரையில், அதிகபட்சமாக டேவிட் வார்னர் ஒரே அணிக்காக மூன்று முறை வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த சீசன்களில் ஆரஞ்சு தொப்பி வென்ற வீரர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

1. ஷான் மார்ஷ் - பஞ்சாப், 2008

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர் ஷான் மார்ஷ் அரஞ்சு கேப்பை வென்றார். அந்த தொடரில் 5 அரைசதங்கள், ஒரு சதம் உட்பட 616 ரன்களை சேர்த்தார். அதிகபட்சமாக 115 ரன்களை சேர்த்தார்.

2. மேத்யூ ஹேடைன் - சென்னை, 2009

2009ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ஹைடன், 572 ரன்களை விளாசினார். அதிகபட்சமாக 89 ரன்கள் உட்பட 5 அரைசதங்கள் விளாசி, ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

3. சச்சின் டெண்டுலகர் - மும்பை, 2010

2010ம் ஆண்டு மும்பை அணிக்காக தலைமை தாங்கி விளையாடிய சச்சின் டெண்டுல்கர் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். தொடர் முடிவில் 5 அரைசதங்கள் உட்பட 618 ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்றார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார்.

4. கிறிஸ் கெயில் - பெங்களூரு, 2011,12

2011ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாவிட்டாலும், காயமடைந்த ஒருவருக்கான மாற்று வீரராக பெங்களூரு அணியில் கெயில் இணைந்தார். அதைதொடர்ந்து 2011ம் ஆண்டில் பெங்களூரு அணிக்காக கெயில், 3 அரைசதங்கள், 2 சதங்கள் உட்பட 608 ரன்களை விளாசினார். அந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 107 ரன்கள் ஆகும். அதைதொடர்ந்து, 2012ம் ஆண்டு தொடரிலும் 7 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 733 ரன்களை விளாசினார். இதன் மூலம் அடுத்தடுத்து ஆரஞ்சு கேப்பை வென்ற வீரர் மற்றும் இரண்டு முறை ஆரஞ்சு கேப்பை வென்ற முதல் வீரர் எனும் பெருமையை கெயிலை பெற்றார்.

5. மைக்கேல் ஹஸ்ஸி - சென்னை, 2013

2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ஹஸ்ஸி, 6 அரைசதங்கள் உட்பட 733 ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப்பை வென்றார். இதன் மூலம் ஒரு தொடரில் தனிநபரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் எனும் கெயிலின் சாதனையை ஹஸ்ஸி சமன் செய்தார்.

6. ராபின் உத்தப்பா - கொல்கத்தா, 2014

ஐபிஎல் 7வது சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய உத்தப்பா, 5 அரைசதங்கள் உட்பட 660 ரன்களை விளாசி ஆரஞ்சு கேப்பை வென்றார். இந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 83.

7.டேவிட் வார்னர் - ஐதராபாத், 2015,17,19

ஐதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட டேவிட் வார்னர், 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து ஆரஞ்சு கேப்பை வென்று சாதனை படைத்தார். அந்த ஆண்டுகளில் முறையே 562, 641 மற்றும் 692 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்சு கேப்பை மூன்று முறை வென்ற ஒரே வீரர் எனும் சாதனையை வார்னர் தன்னகத்தே கொண்டுள்ளார்.

8. விராட் கோலி - பெங்களூரு, 2016

2016ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, 973 ரன்களை விளாசினார். இதில் 4 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும். இது இன்றளவும் யாராலும் தகர்க்க முடியாமல்,  ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் ஒரு நபரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளது.

9. கேன் வில்லியம்சன் - ஐதராபாத் , 2018

11வது ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய வில்லியம்சன், 8 அரைசதங்கள் உட்பட 735 ரன்களை விளாசி ஆரஞ்சு கேப்பை வென்றார். அந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 84  ரன்கள் ஆகும்.

10. கே.எல். ராகுல் - பஞ்சாப், 2020

2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட ராகுல், அந்த தொடரில் 670 ரன்களை விளாசி ஆரஞ்சு கேப்பை வென்றார்.  அந்த தொடரில் அவர் 5 அரைசதங்கள், ஒரு சதம் விளாசினார். அதிகபட்ச ஸ்கோர் 132 ரன்கள் ஆகும்.

11. ருத்ராஜ் கெய்க்வாட் - சென்னை, 2021

14வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இளம் வீரரான கெய்க்வாட், 635 ரன்களை சேர்த்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார். அவரது அந்த தொடரில் அதிகபட்ச ஸ்கோர் 101 ரன்கள் ஆகும்.

12. ஜாஸ் பட்லர், ராஜஸ்தான், 2022

15வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய பட்லர், 4 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 863 ரன்களை விளாசி ஆரஞ்சு கேப்பை தனதாக்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget