மேலும் அறிய

MS Dhoni: முடிவுக்கு வரும் தோனிக்கும் ரசிகர்களுக்குமான காதல் கதை; உருக்கத்தில் ரசிகர்கள்!

IPL 2024 : சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் 14 ஆண்டுகளாக இருந்த தோனி, தற்போது கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென தனி வரலாற்றை சகாப்தத்தை ரசிகர் பட்டாளத்தை  உருவாக்கியவர் மகேந்திர சிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். தோனி கிரிக்கெட் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தோனி உருவாக்க முக்கிய காரணம் அவரது சிக்ஸர்தான். தோனியின் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் அவரை தல தோனி என அழைத்து வருகின்றனர். 

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான காலகட்டங்களில் அவர் அடித்த சிக்ஸர்களை ஹெலிஹாப்டர் சிக்ஸர் என அழைக்கப்பட்டது. தோனியின் சிக்ஸர் அடிக்கும் திறன் மட்டும் இல்லாமல் தோனியின் ஹேர் ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பே இருந்தது. இந்த சிக்ஸர்கள் மட்டும் இல்லாமல் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல எடுக்கப்பட்ட ரன்னை தோனி சிக்ஸர் விளாசிதான் கோப்பையில் இந்தியாவின் பெயரை பொறிக்க வைத்தார். 

தோனியின் மீதான காதல் கதை

இதனாலே தோனியின் சிக்ஸர் மீது அவரது ரசிகர்களுக்கு தனி காதல் கதை உள்ளது. சர்வதேச போட்டிகளிலேயே தோனி சிறந்த ஃபினிஷர் என பெயர் எடுத்த பின்னர், ஐபிஎல் போட்டியிலும் தனது ஃபினிஷர் ரோலை சிறப்பாகவே செய்து வந்தார் தோனி. குறிப்பாக ரசிசர்கள் மத்தியில் தோனியின் சிக்ஸர் மீது இருக்கும் காதல் கதைக்காகவே மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வந்தனர். தோனி இதுவரை 239 சிக்ஸர்கள் பறக்கவிட்டு சென்னை அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். 

இதனாலே கடந்த சில ஆண்டுகளாக இது தோனியின் கடைசி சீசன், கடைசி சீசன் என ஊடகங்களிலும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் இதற்கெல்லாம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த தோனி, சென்னை அணி ரசிகர்களுக்காக தான் சென்னையில் விளையாடுவேன் என தெரிவித்திருந்தார். இதற்காகவே கடந்த சீசன் விளையாடினார். கடந்த சீசனில் தோனி தலைமையில் சென்னை அணி கோப்பையை வென்றது. 

இந்நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னர் தோனி தனது முகநூல் பக்கத்தில், ”என்னால் காத்திருக்க முடியவில்லை. வரக்கூடிய புதிய சீசனில் புதிய அத்தியாத்தை தொடங்குகின்றேன். காத்திருங்கள்” என பொருள் படும்படி பதிவிட்டு இருந்தார். இது ரசிகர்களுக்கு தோனி மறைமுகமாக தெரிவிக்கும் ஓய்வு குறித்த அறிவிப்பு என கூறப்பட்டது. 

இந்நிலையில் தோனிக்கு பதிலாக இந்த சீசனில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும் தோனி சென்னை அணிக்காக விளையாடுவாரா, முதல் போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வி இப்போது வரை மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தோனியின் கடைசி சீசன் கடைசி சீசன் என சொல்லி வந்த நிலையில், தோனியின் கடைசி சீசன் இதுதான் என உறுதியாகிவிட்டது. இது தோனியின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி இதுவரை 250 ஐபிஎல் போட்டிகளில் விளாயாடியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Vs Annamalai: “மத்திய அரசு திட்டங்களுக்கு நாச்சியப்பன் கடையில் திமுக பெயரை பொறிப்பது இனி நடக்காது“- அண்ணாமலை
“மத்திய அரசு திட்டங்களுக்கு நாச்சியப்பன் கடையில் திமுக பெயரை பொறிப்பது இனி நடக்காது“- அண்ணாமலை
SBI Reduces Interests: SBI-ல கடன் வாங்கியிருக்கீங்களா.? அப்போ இந்த செய்திய முதல்ல படிங்க - வட்டி குறையுது
SBI-ல கடன் வாங்கியிருக்கீங்களா.? அப்போ இந்த செய்திய முதல்ல படிங்க - வட்டி குறையுது
UAE Scientists Invent RCP-Chip: இனி ஆய்வகம் தேவையில்லை, நோய்களை 10 நிமிடத்தில் கண்டறியும் பேப்பர் சிப் - UAE விஞ்ஞானிகள் அசத்தல்
இனி ஆய்வகம் தேவையில்லை, நோய்களை 10 நிமிடத்தில் கண்டறியும் பேப்பர் சிப் - UAE விஞ்ஞானிகள் அசத்தல்
Iran Warns 3 Countries: அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Vs Annamalai: “மத்திய அரசு திட்டங்களுக்கு நாச்சியப்பன் கடையில் திமுக பெயரை பொறிப்பது இனி நடக்காது“- அண்ணாமலை
“மத்திய அரசு திட்டங்களுக்கு நாச்சியப்பன் கடையில் திமுக பெயரை பொறிப்பது இனி நடக்காது“- அண்ணாமலை
SBI Reduces Interests: SBI-ல கடன் வாங்கியிருக்கீங்களா.? அப்போ இந்த செய்திய முதல்ல படிங்க - வட்டி குறையுது
SBI-ல கடன் வாங்கியிருக்கீங்களா.? அப்போ இந்த செய்திய முதல்ல படிங்க - வட்டி குறையுது
UAE Scientists Invent RCP-Chip: இனி ஆய்வகம் தேவையில்லை, நோய்களை 10 நிமிடத்தில் கண்டறியும் பேப்பர் சிப் - UAE விஞ்ஞானிகள் அசத்தல்
இனி ஆய்வகம் தேவையில்லை, நோய்களை 10 நிமிடத்தில் கண்டறியும் பேப்பர் சிப் - UAE விஞ்ஞானிகள் அசத்தல்
Iran Warns 3 Countries: அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
NEET UG 2025 Tamil Nadu: என்னதான் ஆச்சு தமிழ்நாட்டுக்கு? குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தமிழ் வழியில் எழுதியோரும் குறைவு!
MG EV Car Price: அடேயப்பா.!! இவி காரில் ரூ.6.14 லட்சம் வரை விலையை குறைத்த எம்.ஜி நிறுவனம் - எந்த மாடல் தெரியுமா.?
அடேயப்பா.!! இவி காரில் ரூ.6.14 லட்சம் வரை விலையை குறைத்த எம்.ஜி நிறுவனம் - எந்த மாடல் தெரியுமா.?
Israel's Defence HQ Hit: அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
NEET UG 2025 Topper: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மகேஷ் குமார்; முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இத்தனை பேர்தானா?
Embed widget