மேலும் அறிய

Dhoni Records : தோனி அடித்த ஒரே ஒரு சிக்ஸர்… ஓஹோன்னு ரெக்கார்ட்ஸ்… நேற்றைய போட்டியில் என்னென்ன சாதனைகள்?

சிஎஸ்கே அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும், தோனியின் கடைசி ஓவர் அதிரடி ரசிகர்களை திருப்திபடுத்தியது. அவர் இதன்மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.

ஐபிஎல் 15வது சீசனின் தொடக்க போட்டியில் சென்னை குஜராத் அணிகள் மோதி தொடரை துவங்கி வைத்துள்ளன. பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வென்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி இந்த ஐபிஎல் 2023 ஐ தொடங்கியுள்ள நிலையில் அந்த அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும், தோனியின் கடைசி ஓவர் அதிரடி ரசிகர்களை திருப்தி படுத்தியது. அவர் இதன்மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். மைல்கற்களை முறியடித்து சாதனைகளை படைப்பது தோனிக்கு புதிதல்ல என்றாலும் அயர்லாந்து பந்துவீச்சாளர், ஜோஷ் லிட்டில் வீசிய பந்தை ஒரு பெரிய சிக்ஸருக்கு விரட்டியதன் மூலம் 200 சிக்ஸ் கிளப்பில் இணைந்துள்ளார். 

ஒரு அணிக்காக அதிக சிக்ஸர்கள்

CSK இன் இன்னிங்ஸின் இறுதி ஓவரில் இடியாக அடிக்கப்பட்ட புல் ஷாட் மூலம் தோனி இந்த சாதனையை எட்டியுள்ளார். போட்டியின் வரலாற்றில் ஒரு ஐபிஎல் அணிக்காக 200 சிக்ஸர்களை அடித்த ஐந்தாவது வீரர் ஆனார். ஒட்டுமொத்தமாக தோனி தற்போது 230 ஐபிஎல் சிக்ஸர்களை அடித்துள்ளார். அதில் 3 சிக்ஸர்கள் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்: GT vs CSK IPL 2023: சென்னையின் வியூகங்களை சுக்குநூறாக்கி அபார வெற்றி பெற்ற குஜராத் அணி; இந்த சீசனின் முதல் வெற்றி..!

ஒரு ஐபிஎல் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த பட்டியல்

ஒரே அணிக்காக, 200 சிக்ஸர்களுடன் பேட்டர்கள் பட்டியலில் எம்எஸ் தோனி இப்போது 5வது இடம் பிடித்துள்ளார். அவருக்கு முன்னால் கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், கீரன் பொல்லார்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.

கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி): 239

ஏபி டி வில்லியர்ஸ் (ஆர்சிபி): 238

கீரன் பொல்லார்ட் (எம்ஐ): 223

விராட் கோலி (ஆர்சிபி): 218

எம்எஸ் தோனி (சிஎஸ்கே): 200

Dhoni Records : தோனி அடித்த ஒரே ஒரு சிக்ஸர்… ஓஹோன்னு ரெக்கார்ட்ஸ்… நேற்றைய போட்டியில் என்னென்ன சாதனைகள்?

20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள்

இன்னொரு சாதனையாக, இந்தியன் பிரீமியர் லீக்கின் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் தோனி தனது இடத்தில் இன்னும் வலுவாக அமர்ந்துள்ளார்.

ஐபிஎல் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள்:

எம்எஸ் தோனி – 53

கீரன் பொல்லார்ட் – 33

எம்.எஸ்.தோனி பேட்டிங்

முக்கியமான கட்டத்தில் நம்பர் 7இல் களம் கண்ட தோனி, 200 ஸ்டிரைக் ரேட்டுடன், 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து அணி ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார். கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்த தோனியின் வேகமான குவித்த ரன்கள் சிஎஸ்கே போர்டில் 178 ரன்களை பதிவு செய்ய உதவியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget