மேலும் அறிய

MI vs RCB IPL 2023: பலமான பெங்களூரிடம் எடுபடுமா மும்பை பந்து வீச்சு.. டாஸ் வென்று பந்து வீச முடிவு..!

IPL 2023, Match 54, MI vs RCB: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய நிலையில், 70 சதவீத போட்டிகள் முடிவடைந்து விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. குஜராத் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில், மற்ற 3 அணிகள் யார் என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது. அந்த இடங்களுக்காக மீதமுள்ள 9 அணிகளுமே கடுமையாக போராடி வருகின்றன. 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

 நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று களமிறங்குகியுள்ளது. அதேநேரம், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பெங்களூரு அணி நிலவரம்:

நடப்பு தொடரில் பெங்களூரு அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கோலி, டூப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். அவர்களை தவிர அந்த அணியை சேர்ந்த வேறு எந்தவொரு பேட்ஸ்மேனும் நடப்பு தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. அதேநேரம், பந்துவீச்சிலும் முகமது சிராஜை தவிர மற்ற வீரர்கள் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றனர். இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் ஹர்ஷல் படேல் கூட ரன்களை வாரி வழங்கி வருகிறார். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியுற்றதால், இந்த போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பெங்களுரு அணி தீவிரமாக உள்ளது

மும்பை அணி நிலவரம்:

மும்பை அணியும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை எல்லா போட்டியிலும் யாரேனும் ஒருவர் அதிரடியாக விளையாடி கொடுத்து விடுகின்றனர். ஆனால், பந்துவீச்சு தான் அந்த அணியின் பெரும் பிரச்னையாக உள்ளது. ஆர்ச்சர் போன்றோர் ரன்களை வாரிக்கொடுத்து வருகின்றனர். பியுஷ் சாவ்லா மட்டுமே ரோகித்தின் நம்பிக்கை அஸ்திரமாக உள்ளார். இன்றைய போட்டியில் வெல்ல மும்பை அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவது மிகவும் முக்கியம். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வியுற்றதை அடுத்து, இன்றைய போட்டியில் வெல்ல மும்பை அணியும் உறுதியுடன் உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Tata Curvv: என்னடா பொசுக்குன்னு ஏத்திட்டீங்க.. ரெண்டு மாசம் டல்லடிச்சுமா? கூபே காரின் விலையை ஏற்றிய டாடா
Tata Curvv: என்னடா பொசுக்குன்னு ஏத்திட்டீங்க.. ரெண்டு மாசம் டல்லடிச்சுமா? கூபே காரின் விலையை ஏற்றிய டாடா
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
உங்கள் தண்ணீரின் தரம் சரியா? வீட்டில் இருந்தபடியே அறிய எளிய வழிகள்! தண்ணீர் சுத்தத்தை உடனே சோதிக்கலாம்!
உங்கள் தண்ணீரின் தரம் சரியா? வீட்டில் இருந்தபடியே அறிய எளிய வழிகள்! தண்ணீர் சுத்தத்தை உடனே சோதிக்கலாம்!
Embed widget