MI vs LSG, IPL 2023: பிளே ஆஃப் வாய்ப்பை தட்டி தூக்கப்போவது யார்?.. மும்பை - லக்னோ அணிகளின் பிளேயிங் லெவன் இதோ
ஐபிஎல் தொடரில் மும்பை - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள, பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் மும்பை - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள, பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 62 லீக் போட்டிகள் முடிந்த பிறகும் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னணியில் இருந்த மற்ற அணிகள் கூட அடுத்தடுத்த தோல்விகளால் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
லக்னோ - மும்பை மோதல்:
லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 63வது லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோத உள்ளன. மும்பை அணி நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் நீடிக்கிறது. லக்னோ அணியும் 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் ஒரு டிராவுடன், 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோல்வியுற்றால், பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கவும் வாய்ப்புள்ளது. இந்த சூழலில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளும் தங்களது பிளேயிங் லெவன் விவரங்களை வெளியிட்டுள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, க்ருணால் பாண்டியா (கேப்டன்), பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய், ஸ்வப்னில் சிங், மோஹ்சின் கான்
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
யாஷ் தாக்கூர், கிருஷ்ணப்பா கவுதம், சாம்ஸ், யுத்விர் சிங், மேயர்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஆகாஷ் மத்வால், நேஹால் வதேரா, டிம் டேவிட், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஹ்ரித்திக் ஷோகின்
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
விஷ்னு வினோத், ரமன்தீப் சிங், ஸ்டப்ஸ், குமார் கார்த்திகேயா, ராகவ் கோயல்
நேருக்கு நேர்?
இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்குநேர் சந்தித்துள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே வெற்றிபெற்றது.