மேலும் அறிய

சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஆரம்பம் - மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு – அதிர்ச்சி குண்டு போட்ட பயிற்சியாளர்

அவ்வளவுதான் சிஎஸ்கே என நினைக்கும்போதெல்லாம், திடீரென சுனாமியாய் எழுந்து அசத்தும் திறமை தோனியின் படைக்கு எப்போதும் உண்டு.

சிஎஸ்கே அணிக்கு என்ன சார் ஆச்சு… இப்படி திடீர்னு சொதப்பராங்க என்ற பேச்சு, சேப்பாக்கம் மைதானம் போனாலே கேட்குது. அதுமட்டுமல்ல, இனி வரும் ஆட்டங்கள் எல்லாம், சென்னை அணிக்கு மிக, மிக முக்கியம். வெல்ல வேண்டியது மட்டுமல்ல, அதிக ரன் ரேட்டும் தேவை. இந்த நிலையில், சிஎஸ்கே அணி, மகிழ்ச்சியான சூழல், வழக்கமான பயற்சிகள் என வழக்கம்போல் தமது வலைப்பயிற்சிகளில் தீவிரமாக இருக்கிறது.

"ப்ளே ஆஃப்" போட்டிகளுக்கு தகுதிப்பெறப் போவது யார் எனும் கட்டத்தை நெருங்கும் நேரத்தில், மற்ற அணிகள் பட்டைய கிளப்புகின்றன. ஆனால், சிஎஸ்கே அணி திடீரென தடம் புரள்கிறது.  இதுபோதாதென்று, சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சென்னை அணியின் கோடான கோடி ரசிகர்களின் ஆசையை துவம்சம் செய்யும் வகையில் அதிர்ச்சி குண்டு ஒன்றைப் போட்டுள்ளார். 

பயிற்சியாளர் போட்ட அதிர்ச்சி குண்டு:

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே-வின் வேகப்பந்துவீச்சீல் பலமாக இருப்போர் என்றால், பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசூர் ரஹ்மான், தீபக் சாஹர் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள்தான். இவர்கள் தவிர்த்து, ரிச்சர்ட் கிலீசன் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர். ஆனால், இதுவரை சிறப்பாகப் பந்துவீசி வந்த பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசூர், தீபக் சாஹர் ஆகிய நான்கு பேரும் இனி அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாட முடியுமா என்பது சந்தேகமே என அதிர்ச்சிக் குண்டை போட்டுள்ளார் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்.

உலகக் கோப்பை போட்டிகள், ஜூன் 2-ம் தேதி தொடங்குவதால், ஐபிஎஸ் போட்டிகளில் ஆடியது போதும், தாயகப் பணிக்குத் திரும்புங்கள் என முஸ்தாபீசூர் ரஹ்மானை, வங்கதேசம் அழைத்துக் கொண்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் எதிராக அவர் விளையாடிய போட்டிதான், இந்த ஐபிஎல்-லில் அவர் ஆடிய கடைசிப் போட்டி. அதேபோல், உலகக் கோப்பை செல்வதற்கான, “விசா” நடைமுறைகளுக்கு பதிரானாவும் சுழற்பந்துவீச்சாளர் தீட்சனாவும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் எப்போது வருவார்கள் என்பது குறித்து இதுவரை தெளிவான அறிக்கை இல்லை. 

இந்தச் சூழலில், கடந்த போட்டியில், சில பந்துகள் வீசிய போது, காயம் அடைந்து வெளியேறிய கோடிகளில் வாங்கப்பட்ட நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹரின் காயம் குறித்து நேர்மறையான தகவல்கள் இல்லை என்பது வருத்தம் தருகிறது. அவர் மீண்டு வர காலதாமதம் ஆகும் என பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, காய்ச்சல் காரணமாக அவதிப்படும் துஷார் தேஷ் பாண்டேவும் மேலும் சில ஆட்டங்களுக்கு தலைக்காட்ட மாட்டார் எனவும் கூறப்படுகிறது. 

இதனால் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல், பொதுவாக ரன்களை வாரி வழங்கும் முகேஷ் சவுத்ரி, ஷர்துல் தாக்கூர், கடந்த போட்டியில் அறிமுகமான ரிச்சர்ட் கிலீசன் ஆகியோர்தான் இனி மீதமுள்ள போட்டிகளில் சிஎஸ்கே-வின் வேகப்பந்துவீச்சாளர்கள். இவர்களைத் தவிர, ஜடேஜா, சிவம் துபே, மொய்ன் அலி, சாண்ட்னர் போன்ற சுழல்பந்துவீச்சாளர்கள்தான் சிஎஸ்கே-வின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

பரவும் “மேட்ச் பிக்சிங்” பேச்சு:

இதற்கிடையே, சிஎஸ்கே அணிக்கு என்னாச்சு, மேட்ஸ் ஃபிக்சிங் ஏதேனும் செஞ்சிட்டாங்களா என சமுக வலைதளங்களிலும் சேப்பாக்கம் மைதானத்திலும் ரசிகர்கள் பட்டிமன்றத்தை தொடங்கிவிட்டனர். அவர்கள் பேசுவதற்கு ஏற்ப, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை படுசொதப்பலாக இருந்தது. அண்மையில் ஃபார்முக்கு வந்த மிட்செல் வர வேண்டிய இடத்தில் சிவம் துபே, அதேபோல், மொய்ன் அலி வர வேண்டிய இடத்தில் ஜடேஜா, “தல” தோனி கூட, கடைசி ஓவரில் ரன் எடுக்காமல், சிக்சர் மட்டும்தான் அடிப்பேன் என அடம்பிடித்த காட்சி, கேட்ச்-களைக் கோட்டைவிடும் காட்சிகள், பல நேரங்களில் சொதப்பும் ஃபீல்டிங் போன்றவற்றை எல்லாம் பார்க்கும் போது, “லைட்டா” சந்தேகம் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது என சிஎஸ்கே ரசிகர்கள் பேசுவது காதில் விழாமல் இல்லை. 

கடும் சவால் காத்திருக்கு:

10 போட்டிகளில் 5 வெற்றிகள் மட்டுமே பெற்று இருக்கும் சிஎஸ்கே அணி, மீதமுள்ள 4 ஆட்டங்களில், மூன்றில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும். அப்போதுதான், ஃப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். தற்போதுள்ள நிலையில், அது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே தெரிகிறது. ஆனால், ஒரு வெளிச்சக் கீற்று என்னவென்றால், அவ்வளவுதான் சிஎஸ்கே என நினைக்கும்போதெல்லாம், திடீரென சுனாமியாய் எழுந்து அசத்தும் திறமை தோனியின் படைக்கு எப்போதும் உண்டு. அது இந்த முறை சாத்தியமாகுமா என்பது, அடுத்த  இரு வாரங்களில் நமக்குத் தெரிந்துவிடும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget