LSG Vs KKR, IPL 2024: பிளே-ஆஃப் ரேஸில் முந்தப்போவது யார்? கொல்கத்தா - லக்னோ அணிகள் இன்று மோதல்
LSG Vs KKR, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
LSG Vs KKR, IPL 2024: லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 52 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது. மும்பை அணி நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி உள்ளது. மீதமுள்ள 9 அணிகளும் 4 இடங்களுக்காக முட்டி மோதி வருகின்றன. அந்த வகையில் வகையில் வார இறுதியான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் இரண்டாவது போட்டியில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
லக்னோ - கொல்கத்தா பலப்பரீட்சை:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய நான்கு லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு மேலும் பிரகாசமாகிவிடும். நடப்பு தொடரில் ஏற்கனவே லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணியோ 10 போட்டிகளில் விளையாடி ஆறில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள லீக் போட்டிகளில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அதோடு, நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு பழிவாங்கவும் லக்னோ அணி முனைப்பு காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது லக்னோ அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடக்க விரர் டி-காக் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுவது லக்னோ அணியின் பலவீனமாக உள்ளது. கே,எல். ராகுல், ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். மோஷின் கான், யாஷ் தாக்கூர் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். கொல்கத்தா அணியில் சால்ட், நரைன், ஸ்ரேயாஸ் அய்யர், ரசல் மற்றும் ரிங்கு சிங் என, அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். மிட்செல் ஸ்டார்ட் ஃபார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஹர்ஷித் ராணா மற்றும் நரைன் ஆகியோரும் பந்துவீச்சில் அசத்தி வருகின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணி 3 முறையும், கொல்கத்தா அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 210 ரன்களையும், குறைந்தபட்சமாக 161 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 208 ரன்களையும், குறைந்தபட்சமாக 101 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
லக்னோ மைதானம் எப்படி?
லக்னோ ஏக்னா மைதானம் ஸ்லோ பிட்ச் என வர்ணிக்கப்படுகிரது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாத்தியமாக இருக்கும். முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, பெரிய இலக்கை நிர்ணயிப்பது நல்ல முடிவாக இருக்கும்.
உத்தேச அணி விவரங்கள்:
லக்னோ: KL ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், மயங்க் யாதவ்/கே கவுதம்
கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி / மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி