மேலும் அறிய

KKR vs SRH Match Highlights: மகுடம் சூடியது கொல்கத்தா! ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கம்பீர் பாய்ஸ் - கே.கே.ஆர். ரசிகர்கள் ஹாப்பி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

இறுதிப் போட்டி:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17ல் இன்று இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது இந்த போட்டி. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களம் இறங்கினார்கள். இறுதிப் போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு நிலவியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். அதன்படி, அபிஷேக் சர்மா 2 ரன்கள் கிளின் போல்ட் ஆகி விக்கெட்டை இழந்தார். அதேபோல் டிராவிஸ் ஹெட்டும் டக் அவுட் ஆகி வெளியேறினார். 6 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஹைதராபாத் அணி. 

பின்னர் வந்த ராகுல் திரிபாதி எய்டன் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னட்ஷிப்பாவது அந்த அணியை மீட்குமா என்ற நிலைய்ல் திரிபாதி 9 ரன்களில் நடையைக்கட்டினார். அடுத்ததாக களம் இறங்கிய நிதிஷ் ரெட்டி மார்க்ரம் உடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். அந்தவகையில் 10 ரன்கள் களத்தில் நின்ற நிதிஷ் ரெட்டி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மறுபுறம் மிரட்டி கொண்டிருந்தார்கள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள். இதனிடையே எய்டன் மார்க்ரமும் விக்கெட்டை இழந்தார். 23 பந்துகள் களத்தில் நின்ற மார்க்ரம் 3 பவுண்டரிகள் உட்பட 20 ரன்கள் எடுத்தார். 10.2 ஓவர்கள் முடிவில் 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.  அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 17 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க இதனிடையே சக்பாஸ் அகமது அப்துல் சமத் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் வந்த பேட் கம்மின்ஸ் சரிவில் இருந்த அணியை ஓரளவிற்கு மீட்டு கொடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 113 ரன்களை எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா:

எளிய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினார்கள். இதில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்டார் சுனில் நரைன். அடுத்த பந்துலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 6 ரன்களில் வெளியேற அடுத்து பேட்டிங்கை தொடங்கினார் வெங்கடேஸ் ஐயர். ரஹ்மானுல்லா குர்பாஸுடன் ஜோடி சேர்ந்த அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துகளை சிக்ஸரும் பவுண்டரியுமாக பறக்க விட்டர் வெங்கடேஸ் ஐயர். இதனிடையே குர்பாஸ் 39 ரன்களில் விக்கெட்டானார். 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 50 ரன்கள் எடுத்து அரைசதத்தை பதிவு செய்தார். இவ்வாறாக 10.3 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. ஐபிஎல் சீசனில் 3 வது முறையாக கோப்பை வென்றிருக்கிறது கொல்கத்தா அணி. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget