மேலும் அறிய

KKR vs DC, IPL 2023 LIVE: டெல்லி அணிக்கு 128 ரன்கள் இலக்கு.. அனைத்து விக்கெட்களையும் இழந்த கொல்கத்தா!

IPL 2023, Match 28, KKR vs DC: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
KKR vs DC, IPL 2023 LIVE: டெல்லி அணிக்கு 128 ரன்கள் இலக்கு.. அனைத்து விக்கெட்களையும் இழந்த கொல்கத்தா!

Background

ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் விவரங்கள் மற்றும் அதன் முடிவுகளை இந்த தொகுப்பில் அறியலாம்.

டெல்லி - கொல்கத்தா மோதல்:

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடந்து முடிந்த போட்டிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் தொடர் அறிமுகமானது முதலே விளையாடி வரும் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள், இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 15 முறை டெல்லி அணியும், 16 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில், மூன்றில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரை கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் 10 முறை மோதியுள்ளன. அதில், 5 முறை கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரை 75 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 32 வெற்றிகளையும், 41 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

ஸ்கோர் விவரங்கள்:

டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 210

கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 228

டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 97

கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்:  98

தனிநபர் சாதனைகள்:

டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த கொல்கத்தா வீரர்: நிதிஷ் ராணா, 369

கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த டெல்லி வீரர்: டேவிட் வார்னர், 399

டெல்லி அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த கொல்கத்தா வீரர்: சுனில் நரைன், 25

கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த டெல்லி வீரர்: குல்தீப் யாதவ், 8

அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - வார்னர், 107* vs கொல்கத்தா

சிறந்த பந்துவீச்சு - வருண் சக்ரவர்த்தி - 5/20 vs டெல்லி

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில்  டெல்லி அணி சார்பில் அக்‌ஷர் படேல் அதிகபட்சமாக 6 கேட்ச்களையும், கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் அதிகபட்சமாக 8 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

நடப்பு தொடரில் இதுவரை:

கொல்கத்தா அணி நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணியோ இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

22:38 PM (IST)  •  20 Apr 2023

டெல்லி அணிக்கு 128 ரன்கள் இலக்கு.. அனைத்து விக்கெட்களையும் இழந்த கொல்கத்தா!

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. 

21:41 PM (IST)  •  20 Apr 2023

KKR vs DC, IPL 2023 LIVE: மீண்டு எழுமா கொல்கத்தா..? 6 விக்கெட்களை இழந்த பரிதாபம்!

கொல்கத்தா அணி 13 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. 

21:37 PM (IST)  •  20 Apr 2023

KKR vs DC, IPL 2023 LIVE: 12 ஓவர் முடிவில் கொல்கத்தா அணியின் ஸ்கோர் நிலவரம்!

12 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 75 ரன் எடுத்துள்ளது.

21:27 PM (IST)  •  20 Apr 2023

KKR vs DC, IPL 2023 LIVE: ரிங்கு சிங் விக்கெட்டையும் இழந்த கேகேஆர்... 5 விக்கெட்கள் காலி..!

கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ரிங்கு சிங் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

21:21 PM (IST)  •  20 Apr 2023

4 விக்கெட்களை இழந்த கொல்கத்தா... 50 ரன்களுடன் தடுமாற்றம்..!

9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 54 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget