ஐபிஎல்: முதல் பந்தில் விக்கெட் எடுத்த வருண்; அதிரடி காட்டும் தவான்- 10 ஓவர்களில் டெல்லி அணி 65 !
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 15ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடும். ஆகவே இந்தப் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் ப்ளே ஆஃப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்து ப்ளே போட்டிக்கு முன்னேறியது.
10 overs gone, @DelhiCapitals move to 65/1. @SDhawan25 & @MStoinis are stitching a fine partnership. 👌 👌 #VIVOIPL | #KKRvDC | #Qualifier2
— IndianPremierLeague (@IPL) October 13, 2021
Follow the match 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/NnMo2ID39N
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிருத்வி ஷா ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் பவுண்டரிகள் விளாசினார். அதைத் தொடர்ந்து 3ஆவது ஓவரை தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் பிருத்வி ஷா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதனால் முதல் 6 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் ஷிகர் தவான் மற்றும் ஸ்டையோனிஸ் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டெல்லி அணி 10 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பெஸ்ட் தருணமாக விராட் கோலி இன்னிங்ஸ் தேர்வு! எந்த போட்டி அது?