IPL Auction 2022: ஹைதராபாத் தட்டித்தூக்கிய தமிழக வீரர்... மாஸ் காட்டிய வாஷிங்டன் சுந்தர்
IPL Auction 2022: அஷ்வினை அடுத்து ஏலத்தில் பங்கேற்ற வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய மெகா ஏலத்தில் 30 தமிழக வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், அஷ்வினுக்கு அடுத்து ஏலத்தில் பங்கேற்ற வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். ஏலத்தில் பங்கேற்க இருக்கும் மாநில வீரர்களில், தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்த வாசிங்டன் சுந்தர்https://t.co/wupaoCzH82 | #IPLMegaAuction2022 #IPLAuction #IPL2022 #IPLAuction2022 #SunrisersHyderabad pic.twitter.com/tJ8DA5vJYb
— ABP Nadu (@abpnadu) February 12, 2022
இதே போல, மற்றொரு தமிழ்நாடு வீரரான நடராஜனையும், ஹைதராபாத் அணி வாங்கி உள்ளது.
#IPL2022MegaAuction | நடராஜானை விட்டுக் கொடுக்காத சன்ரைசர்ஸ் https://t.co/wupaoCQKa2 | #IPLAuction #IPL2022Auction #Natarajan #SRH pic.twitter.com/aUpYvo3Jrm
— ABP Nadu (@abpnadu) February 12, 2022
தொடர்ந்து, என். ஜெகதீசன், முருகன் அஸ்வின், ஹரி நிஷாந்த், சாய் கிஷோர், எம்.சித்தார்த், சஞ்சய் யாதவ், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், பாபா அபராஜித், ஜி.பெரியசாமி, ஆர்.சிலம்பரசன், அலெக்சாண்டர், கிஷன் குமார், சோனு யாதவ், வி.அதியசயராஜ், வி.கவுதம், எம். முகமது, பிரதோஷ் பால், ஜெ.கவுசிக், நிதிஷ் ராஜகோபால், ஆர்.விவேக் (அடிப்படை விலை ரூ.20 லட்சம் நிர்ணயம்) உள்ளிட்டோர் ஏலத்திற்கு வந்துள்ளனர்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 தமிழக வீரர்களில் யார் யார் எந்த எந்த அணிகளில் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும், ஒரு சிலர் எந்த அணியிலும் ஒப்பந்தம் செய்யபடாமல் வெளியேறுகிறார்கள் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
⚡️ “IPL Auction 2022 | புதிய பயணத்திற்கான களம் - ஐ.பி.எல். ஏலம் தொடங்கியது” by @abpnadu #IPLAuction #IPLAuction2022 #IPLMegaAuction2022 #SuperAuction #IPL2022 #IPL2022Auction https://t.co/U6IM9mA28V
— ABP Nadu (@abpnadu) February 12, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்