IPL Auction 2022: காத்திருந்தும் பயனில்லை... டு ப்ளெஸியை விட்டுக்கொடுத்த சிஎஸ்கே
டு ப்ளெஸி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறார்.

ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய மேகா ஏலத்தில் டு ப்ளெஸி சென்னை அணியில் நிச்சயம் எடுக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், டு ப்ளெஸி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறார்.
Faf is now a Royal Challenger 😎😎#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/E24r50BYPT
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
கடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற முக்கிய காரணமாக இருந்தவர். ரிட்டென்சன் மூலம் சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால். அவரை தக்கவைக்கவில்லை.
இருப்பினும், இந்த ஏலத்தில் அவரை மீண்டும் அணியில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டும் எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயத்தில், பாப் டுப்ளிசிசை மும்பை அணி, பெங்களூர் அணி, ஹைதரபாத் அணி புதியதாக களமிறங்கியுள்ள லக்னோ, குஜராத் அணிகளும் வாங்க ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது ஆரம்ப விலை 2 கோடி இருந்தது. தற்போது, அவரை 7 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக வெளிநாட்டு வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தவர் டு பிளெசிஸ். 37 வயதான அவர் விளையாடிய 92 போட்டிகளில் 35.33 சராசரியில் 2721 ரன்கள் குவித்துள்ளார்.
பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், அந்த அணிக்கு யார் கேப்டனாக நியமிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், சென்னை அணிக்கு தூணாக இருந்த டு பிளிசஸை தற்போது வாங்கியிருப்பதால், அவரே கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கோலியும் அவரை நியமிக்க ஆதரவும், ஆலோசனையும் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுவரை கோப்பையை வாங்காத ஆர்சிபி இம்முறை, டுபிளிசஸ் தலைமையில், கூட கோலியின் பலத்துடன் வாங்க வேண்டும் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தற்போது வந்த தகவல் படி, கோலியுடன் டு பிளிசஸ் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

