IPL Auction 2026 Squad: ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை எவ்வளவு கொடுத்து ஏலத்தில் எடுத்தது என்பது குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் மினி ஏலம்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. அதில் 10 அணி நிர்வாகங்களும் பங்கேற்று, அணியில் காலியாக உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக போட்டி போட்டு ஏலம் கேட்டனர். ஒவ்வொரு நிர்வாகமும் தங்களது அணியில் எந்த இடத்திற்கு ஆள் தேவை என்பதை மனதில் வைத்து, குறிப்பிட்ட வீரர்களை இலக்கு வைத்து கோடிகளை கொட்டி ஒப்பந்தத்தை இறுதி செய்தனர். அதில் அதிகபட்சமாக கேமரூன் க்ரீனை 25.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்து மலைக்கச் செய்தது. ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு வெளிநாட்டு வீரருக்கும் இவ்வளவு பெரிய தொகை ஏலத்தில் கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிச்சப்படுத்திய அணி நிர்வாகங்கள்:
ஏலத்தின் முடிவில் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. கொல்கத்தா அணி அதிகபட்சமாக ரூ.64.30 கோடியுடனும், மும்பை அணி குறைந்தபட்சமாக 2.75 கோடியுடனும் ஏலத்தில் களமிறங்கியது. கோடிகளை அள்ளிக் கொடுத்து கடும் போட்டிகளுக்கு மத்தியில் பல வீரர்களை அணிகள் வாங்கினாலும், இறுதியில் சில அணிகள் உபரி நிதியையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏலத்தின் முடிவில் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை எவ்வளவு மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்தது என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுத்த வீரர்கள்:
1. சென்னை சூப்பர் கிங்ஸ்
| வீரர் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| கார்த்திக் சர்மா | 30 லட்சம் | 14.2 கோடி |
| பிரசாந்த் வீர் | 30 லட்சம் | 14.2 கோடி |
| ராகுல் சாஹர் | 1 கோடி | 5.2 கோடி |
| மாட் ஹென்றி | 2 கோடி | 2 கோடி |
| அகெல் ஹொசின் | 2 கோடி | 2 கோடி |
| மேத்யூ ஷார்ட் | 1.5 கோடி | 1.5 கோடி |
| ஜாக் ஃபௌல்க்ஸ் | 75 லட்சம் | 75 லட்சம் |
| சர்ஃப்ராஸ் கான் | 75 லட்சம் | 75 லட்சம் |
| அமன் கான் | 30 லட்சம் | 40 லட்சம் |
2. டெல்லி கேபிடல்ஸ்
| வீரர்கள் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| அயுப் தார் | 30 லட்சம் | 8.40 கோடி |
| பதும் நிசங்கா | 75 லட்சம் | 4 கோடி |
| கைல் ஜேமிசன் | 2 கோடி | 2 கோடி |
| லுங்கி நிகிடி | 2 கோடி | 2 கோடி |
| பென் டக்கெட் | 2 கோடி | 2 கோடி |
| டேவிட் மில்லர் | 2 கோடி | 2 கோடி |
| ப்ரித்வி ஷா | 75 லட்சம் | 75 லட்சம் |
| சாஹில் பராக் | 30 லட்சம் | 30 லட்சம் |
3. குஜராத் டைட்டன்ஸ்
| வீரர்கள் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| ஜேசன் ஹோல்டர் | 2 கோடி | 7 கோடி |
| டாம் பான்டன் | 2 கோடி | 2 கோடி |
| அசோக் சர்மா | 30 லட்சம் | 90 லட்சம் |
| லூக் வுட் | 75 லட்சம் | 75 லட்சம் |
| பிரித்விராஜ் யார்ரா | 30 லட்சம் | 30 லட்சம் |
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
| வீரர் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| கேமருன் க்ரீன் | 2 கோடி | 25.20 கோடி |
| மதீஷா பதிரனா | 2 கோடி | 18 கோடி |
| முஸ்தபிசுர் ரஹ்மான் | 2 கோடி | 9.20 கோடி |
| தேஜஸ்வி சிங் | 30 லட்சம் | 3 கோடி |
| ரச்சின் ரவீந்திரா | 2 கோடி | 2 கோடி |
| ஃபின் ஆலன் | 2 கோடி | 2 கோடி |
| டிம் ஷெஃபர்ட் | 1.5 கோடி | 1.5 கோடி |
| ஆகாஷ் தீப் | 1 கோடி | 1 கோடி |
| ராகுல் திரிபாதி | 75 லட்சம் | 75 லட்சம் |
| தக்ஷ் கம்ரா | 30 லட்சம் | 30 லட்சம் |
| பிரசாந்த் சோலங்கி | 30 லட்சம் | 30 லட்சம் |
| கார்த்திக் தியாகி | 30 லட்சம் | 30 லட்சம் |
| சர்தக் ரஞ்சன் | 30 லட்சம் | 30 லட்சம் |
5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
| வீரர் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| ஜோஷ் இங்கிலிஷ் | 2 கோடி | 8.60 கோடி |
| முகுல் சவுத்ரி | 30 லட்சம் | 2.6 கோடி |
| ரகுவன்ஷி | 30 லட்சம் | 2.2 கோடி |
| ஆண்ட்ரிட்ஜ் நோர்ட்ஜே | 2 கோடி | 2 கோடி |
| ஹசரங்கா | 2 கோடி | 2 கோடி |
| நமன் திவாரா | 30 லட்சம் | 1 கோடி |
6. மும்பை இந்தியன்ஸ்
| வீரர் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| குயிண்டன் டி காக் | 1 கோடி | 1 கோடி |
| மயங்க் ராவத் | 30 லட்சம் | 30 லட்சம் |
| அதர்வா அங்கோலேகர் | 30 லட்சம் | 30 லட்சம் |
| முகமது இஷார் | 30 லட்சம் | 30 லட்சம் |
| டேனீஷ் மாலேவார் | 30 லட்சம் | 30 லட்சம் |
7. பஞ்சாப் கிங்ஸ்
| வீரர் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| பென் த்வார்ஷுயிஸ் | 1 கோடி | 4.40 கோடி |
| கூப்பர் கொனோலி | 2 கோடி | 3 கோடி |
| விஷால் நிஷாத் | 30 லட்சம் | 30 லட்சம் |
| பிரவீன் துபே | 30 லட்சம் | 30 லட்சம் |
8. ராஜஸ்தான் ராயல்ஸ்
| வீரர் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| ரவி பிஷ்னோய் | 2 கோடி | 7.2 கோடி |
| ஆடம் மில்னே | 2 கோடி | 2.40 கோடி |
| ரவி சிங் | 30 லட்சம் | 95 லட்சம் |
| சுஷாந்த் மிஸ்ரா | 30 லட்சம் | 90 லட்சம் |
| குல்தீப் சென் | 75 லட்சம் | 75 லட்சம் |
| பிரிஜேஷ் சர்மா | 30 லட்சம் | 30 லட்சம் |
| அமன் ராவ் பேரலா | 30 லட்சம் | 30 லட்சம் |
| விக்னேஷ் புதூர் | 30 லட்சம் | 30 லட்சம் |
| யாஸ் ராஜ் புஞ்சா | 30 லட்சம் | 30 லட்சம் |
9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
| வீரர் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| வெங்கடேஷ் ஐயர் | 2 கோடி | 7 கோடி |
| மங்கேஷ் யாதவ் | 30 லட்சம் | 5.2 கோடி |
| ஜேக்கப் டஃபி | 2 கோடி | 2 கோடி |
| ஜோர்டான் காக்ஸ் | 75 லட்சம் | 75 லட்சம் |
| கனிஷ்க் | 30 லட்சம் | 30 லட்சம் |
| விஹான் | 30 லட்சம் | 30 லட்சம் |
| விக்கி ஓஸ்ட்வால் | 30 லட்சம் | 30 லட்சம் |
| சாத்விக் தேஸ்வால் | 30 லட்சம் | 30 லட்சம் |
10. சன்ரைசர்ஸ் ஐதராபாத்
| வீரர் | அடிப்படை விலை ரூ. | விற்பனை ரூ. |
| லியாம் லிவிங்ஸ்டன் | 2 கோடி | 13 கோடி |
| ஜாக் எட்வர்ட்ஸ் | 50 லட்சம் | 3 கோடி |
| சலீல் அரோரா | 30 லட்சம் | 1.5 கோடி |
| சிவம் மாவி | 75 லட்சம் | 75 லட்சம் |
| க்ரெய்ன்ஸ் புலேட்ரா | 30 லட்சம் | 30 லட்சம் |
| ப்ரஃபுல் கீல் | 30 லட்சம் | 30 லட்சம் |
| அமித் குமார் | 30 லட்சம் | 30 லட்சம் |
| ஓங்கார் தர்மலே | 30 லட்சம் | 30 லட்சம் |
| சாகிப் உசேன் | 30 லட்சம் | 30 லட்சம் |
| சிவாங் குமார் | 30 லட்சம் | 30 லட்சம் |