மேலும் அறிய

IPL 2025 RCB: "இந்த முறை மிஸ்ஸே ஆகாது" மகுடம் சூடுவாரா அரசன் கோலி? கோப்பையை கையில் ஏந்துமா RCB?

IPL 2025 RCB Team: ஐ.பி.எல். ஏலம் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங், பந்துவீச்சு பலம் எவ்வாறு மாறியுள்ளது? என்று கீழே விரிவாக காணலாம்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஒவ்வொரு முறை ஐ.பி.எல். தொடர் நடைபெறும்போதும் 5 முறை பட்டம் வென்ற மும்பை மற்றும் சென்னை அணிக்கு நிகரான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆகும்.

ஆர்.சி.பி.:

மும்பை மற்றும் சென்னை அணிக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி ஆர்.சி.பி. இதுவரை 17 சீசன்களில் ஆடியிருந்தாலும் ஒரு முறை கூட ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்றதில்லை. ஆனாலும், அந்த அணி மீது இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதும், அந்த அணிக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதற்கும் ஒரே காரணம் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி ஆகும்.

17 தொடர்களாக அந்த அணிக்காக கோப்பையை வென்று தந்த போராடிக் கொண்டிருக்கிறார். பல சீசன்களில் தனி ஆளாக அணிக்காக ஆடியுள்ளார். ஆர்.சி.பி. அணியின் பலவீனமாக இத்தனை தொடர்களில் இருந்து வந்தது பந்துவீச்சு ஆகும். அதை இந்த ஏலத்தில் ஆர்.சி.பி. சரி செய்துள்ளதா? கோப்பையை வெல்ல தயாரான அணியை ஆர்.சி.பி. ஏலத்தில் எடுத்துள்ளதா? என்பதை கீழே காணலாம்.

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஆர்.சி.பி. அணி:

பேட்ஸ்மேன்கள்:

  • விராட் கோலி
  • ரஜத் படிதார்
  • லிவிங்ஸ்டன்
  • பில் சால்ட்
  • ஜிதேஷ் சர்மா
  • டிம் டேவிட்
  • தேவ்தத் படிக்கல்
  • சுவஸ்திக் சிகாரா

ஆல் ரவுண்டர்கள்:

  • குருணல் பாண்ட்யா
  • சுவப்னில் சிங்
  • ரொமோரியோ ஷெப்பர்ட்
  • மனோஜ் பண்டேகே
  • ஜேகப் பெதேல்
  • மோகித் ரதி

பந்துவீச்சாளர்கள்:

  • ஹேசில்வுட்
  • புவனேஷ்வர்
  • ரஷிக்தர்
  • சுயாஷ் சர்மா
  • நுவான் துஷாரா
  • லுங்கி நிகிடி
  • யஷ் தயாள்
  • அபிநந்தன் சிங்

பந்துவீச்சு குறை சரியாகுமா?

ஏலத்தில் முதல் நாளில் கையில் காசு இருந்தும் கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் இருவரில் ஒருவரை ஆர்.சி.பி. அணி எடுக்காததை பலரும் விமர்சித்தனர். ஆனாலும், அடுத்த நாளில் ஆர்.சி.பி.க்கு தேவையான வீரர்களை அணி நிர்வாகம் எடுத்தது. குறிப்பாக, ஒவ்வொரு தொடரிலும் பலவீனமாக கருதப்படும் ஆர்.சி.பி.யின் பந்துவீச்சுக்கு இந்த முறை ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், லுங்கி நிகிடி ஆகிய அனுபவ பந்துவீச்சாளர்களுடன் யஷ் தயாள், நுவான் துஷாரா ஆகியோரும் பலமாக மாறியுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இளம் வீரர் ரஷீக் தர் வேகத்தில் அசத்துவார்.

இவர்களுடன் ஆல் ரவுண்டர்களும் இந்த முறை பலமாக மாறியுள்ளனர். குருணல் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், சுவப்னில் சில், ஜேகப் பேத்தெல், ரொமாரியோ ஷெப்பர்ட் முக்கியமான ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். இவர்களில் ஜேக்கப் பெத்தேல் ஆர்.சி.பி.யில் இருந்து மும்பைக்குச் சென்ற வில் ஜேக்ஸ்க்கு சிறந்த மாற்று வீரராக இருப்பார் என்று கருதப்படுகிறது.

பேட்டிங் எப்படி?

ஒரு முறை கூட கோப்பையை வெல்லாவிட்டாலும் ஆர்.சி.பி.யின் பேட்டிங்கிற்கு என்று எப்போதும்  ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. கெயில், டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல், டுப்ளிசிஸ் என மிரட்டலான பேட்டிங் படை எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.  இவர்களுடன் கோலி முக்கியமான அங்கமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறார்.

இந்த முறை கோலிக்கு வலு சேர்க்கும் விதமாக ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், தேவ்தத் படிக்கல் உள்ளனர். இவர்களுடன் வில் ஜேக்ஸிற்கு மாற்றாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஜேக்கப் பெத்தேல், ஆல்ரவுண்டரில் பேட்டிங்கில் கலக்கும் ஷெப்பர்ட், சுவப்னில் சிங், குருணல் பாண்ட்யாவும் பக்கபலமாக மாறியுள்ளனர்.

அரசனுக்கு அரசணை கிட்டுமா?

இரண்டு முறை இறுதிப்போட்டிக்குச் சென்ற ஆர்.சி.பி. சமீபகாலமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் அணிகளில் தவிர்க்கவே முடியாத அணியாக உள்ளது. குறிப்பாக, கடந்த முறை முதல் 7 போட்டிகளில் தோல்வி அடைந்து அடுத்த அனைத்து போட்டிகளிலும் நெருக்கடியில் களமிறங்கி ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது மறக்கவே முடியாதது ஆகும்.

சென்னை, மும்பை மட்டுமின்றி லக்னோ, ஹைதரபாத், பஞ்சாப் என அனைத்து அணியும் தங்களது அணியை வலுவாக்கியுள்ள நிலையில் மற்ற 9 அணிகளுக்கும் சவால் அளித்து முதன்முறையாக மகுடத்தை ஆர்.சி.பி. சூட்டுமா? கிரிக்கெட்டின் அரசன் விராட் கோலியின் கையில் ஐ.பி.எல். கோப்பையை தருவார்களா? என்பதை காணலாம். ஆர்.சி.பி. அணி ஏலத்தில் எடுத்துள்ள வீரர்கள் திறமையானவர்கள் என்றாலும், சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்தால் அவர்களால் கண்டிப்பாக மகுடத்தை தட்டிச் செல்ல முடியும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget