Swastik Chikara: கோலியின் பாடிகார்ட்.. RCBக்காக களமிறங்குவாரா சிக்ஸர் மன்னன் சுவஸ்திக்?
IPL 2025 RCB: ஐபிஎல் அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் சுவஸ்திக் சிக்காராவிற்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு முறையும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஆர்சிபி முக்கிய அணியாகும். நடப்பு தொடரில் இதுவரை சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஆர்சிபி அணியில் தற்போது முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், எஞ்சிய லீக் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளே வருவாரா சுவஸ்திக்?
இதனால், எஞ்சிய போட்டியில் ஆர்சிபி அணியில் ஆடுவதற்கான வாய்ப்பு சுவஸ்திக் சிக்காராவிற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணி இந்த முறை ஏலத்தில் இவரை எடுத்தது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனென்றால் 20 வயதே ஆன சுவஸ்திக் சுரேந்தர் சிக்காரா உள்ளூர் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நல்ல பேட்டிங் பவர் கொண்ட இவர் இதுவரை 2 முதல்தர போட்டிகளில் ஆடி 74 ரன்களையும், 6 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடி 200 ரன்களையும் எடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கோலியின் பாடி கார்டு போல மைதானத்திலும் ஆர்சிபி அணியின் ட்ரெஸ்ஸிங் அறையிலும் விராட் கோலி உடனே உலா வருபவர் சுவஸ்திக் சிக்காரா.
இளம் ரத்தம்:
இவரை ஏலத்தில் எடுத்தது போதே இவரது பேட்டிங் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட சிக்காரா உத்தரபிரதேசம், டெல்லி கேபிடல்ஸ் ஆடியுள்ள இவர் இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
A swashbuckling century followed by a quick-fire fifty - Swastik Chikara is making his mark in #UPT20.#AbMachegaBawaal #JioUPT20 #UPT20onJioCinema pic.twitter.com/fxvvHx0Grl
— JioCinema (@JioCinema) September 6, 2023
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தான் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் என்பதை சுவஸ்திக் நிரூபிப்பார் என்றே கருதப்படுகிறது. இந்த தொடரில் பல அணிகளும் பல இளம் வீரர்களை அறிமுகப்படுத்தி தங்களது எதிர்கால சொத்தாக மாறியுள்ளனர். ராஜஸ்தான் அணி சூர்யவன்ஷி, டெல்லி அணி அபிஷேக் போரல், குஜராத் அணி சாய் சுதர்சன், மும்பையில் விக்னேஷ் புத்தூர், சென்னையில் ஆயுஷ் மாத்ரே, ஷைக் ரஷீத் என பலரையும் களத்தில் இறக்கியுள்ளது. அந்த வகையில் ஆர்சிபி அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள இளம் வீரர் சுவஸ்திக் சிக்காரா.
நிரந்தரம் ஆவாரா?
இவருக்கு தற்போது வரை அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஷெப்பர்ட் சொந்த நாட்டிற்கு திரும்பினால் அவருக்கு பதிலாகவோ அல்லது படிக்கல்லிற்கு பதிலாகவோ அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றே கருதப்படுகிறது.
கோலியின் மிகப்பெரிய ரசிகரான இவர் விராட் கோலியை தன்னுடைய உடன்பிறவா சகோதரன் என்றே கூறிவருகிறார். மேலும், அவர் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வதை சிலர் கேலி செய்தாலும் அவர் விராட் கோலி உள்பட அணியினரை பார்த்துக் கொள்வது தன்னுடைய பண என்றே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விராட் கோலியுடன் இணைந்து விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பு மூலம் தனது இடத்தை சுவஸ்திக் சிக்காரா நிரந்தரம் ஆக்குவார் என்றே கருதப்படுகிறது.




















