IPL 2025 PBKS vs LSG: ஃபயர் விட்ட பஞ்சாப்! அடிமேல் அடி வாங்கிய லக்னோ! ப்ளே ஆஃப்-க்கு ரெடி?
IPL 2025 PBKS vs LSG: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று தரம்சாலாவில் நடந்த போட்டியில் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை வலுப்படுத்துவதற்கான மோதலில் பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீசியது.
பஞ்சாப் வீரர் பிரியன்ஷ் ஆர்யா 1 ரன்னில் அவுட்டானாலும் பிரப்சிம்ரனின் மிரட்டலான 91 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயரின் 45 ரன்கள், ஷஷாங்க் சிங்கின் 33 ரன்களால் 236 ரன்களை எட்டியது. 237 ரன்கள் என்ற மிக கடினமான இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு பஞ்சாப் பந்துவீச்சிலும் குடைச்சல் தந்தது.
காலி செய்த அர்ஷ்தீப்:
மார்க்ரம்- மார்ஷ் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் மார்ஷ் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அவர் அவுட்டான அதே ஓவரில் 10 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்த மார்க்ரமும் அவுட்டானார். அதன்பின்பு மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனான பூரண் 6 ரன்னில் அர்ஷ்தீப்சிங் பந்தில் அவுட்டானார்கள். லக்னோவின் முக்கிய 3 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் 27 ரன்களுக்குள் காலி செய்த நிலையில் கேப்டன் ரிஷப்பண்ட் - பதோனி ஜோடி சேர்ந்தனர்.
மீண்டும் ஏமாற்றிய ரிஷப்:
பதோனி அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க முயற்சிக்க ரிஷப் பண்ட் அதிரடி காட்ட முயற்சித்தார். அவர் 2 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்த நிலையில் அஜ்மத்துல்லா பந்தில் 18 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த டேவிட் மில்லர் 11 ரன்களுக்கு அவுட்டாக 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
பதோனி சமத் போராட்டம்:
அப்போது பதோனி - சமத் ஜோடி சேர்ந்தனர். இலக்கு மிகவும் பெரியதாக இருந்தாலும் இவர்கள் இருவரும் போராடினார்கள். பதோனி பவுண்டரியாக விளாச, சமத் சிக்ஸராக விளாசினார். இந்த ஜோடி 16 ஓவர்களில் 149 ரன்களை எட்டியது. ஆனாலும், கடைசி 24 பந்துகளில் லக்னோ வெற்றிக்கு 88 ரன்கள் தேவைப்பட்டது.
தோல்வி உறுதியானாலும் இந்த ஜோடி தோல்வி விகிதத்தை குறைக்கப் போராடியது. சிறப்பாக ஆடி அரைசதத்தை நோக்கி முன்னேறிய அப்துல் சமத் அவுட்டானார். அவர் 24 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து யான்சென் பந்தில் அவுட்டானார். ஆனாலும் பதோனி அபாரமாக ஆடி 32 பந்துகளில் அரைசதத்தை விளாசினார்.
ப்ளே ஆஃப்-பில் பஞ்சாப்?
வைஷாக் வீசிய 18வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். ஆனாலும், கடைசி 12 பந்துகளில் லக்னோவிற்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. கடைசியில் அதிரடி காட்டிய பதானியும் அவுட்டானார். அவர் 40 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 74 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் வெளியேறினார். கடைசியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பஞ்சாப் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணிக்காக அர்ஷ்தீப்சிங் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஓமர்சாய் 2 விக்கெட்டுகளையும், சாஹல், ஜான்சென் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பஞ்சாப் தற்போது 15 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.




















