மேலும் அறிய

IPL 2025 MI vs RR: ஐபில் ராஜா மும்பை! ராஜஸ்தானை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி! ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!

IPL 2025 MI vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று ஜெய்ப்பூரில் மோதின. இதில் முதலில் ஆடிய மும்பை அணி அதிரடியாக ஆடியது. ரிக்கெல்டன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் அவர்கள் 217 ரன்களை குவித்தனர். 

இதையடுத்து, 218 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய  ராஜஸ்தான் அணிக்கு இன்று பேட்டிங் சொதப்பியது. தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலே சூர்யவன்ஷி டக் அவுட்டானார். அதன்பின்பு, ராஜஸ்தான் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் சிக்ஸர்களை பறக்கவிட அவரும் 6 பந்துகளில் 2 சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

அடுத்தடுத்து விக்கெட்:

இதையடுத்து, நிதிஷ் ராணா - கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தது. பராக் அடுத்தடுத்து பவுண்டரி விளாசினார்.  நிதிஷ் ராணாவும் பவுண்டரி விளாசி அதிரடிக்கு மாற முயற்சிக்கும் முன் இந்த ஜோடியை போல்ட் பிரித்தார். நிதிஷ் ராணா 11 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

அதன்பின்பு, அதிரடி காட்டிக் கொண்டிருந்த கேப்டன் ரியான் பராக்கை பும்ரா தனது வேகத்தால் காலி செ்தார். அவர் 8 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய ஹெட்மயர் வந்த வேகத்தில் டக் அவுட்டாக ராஜஸ்தானில் தோல்வி உறுதியானது. 

47 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி துருவ் ஜோரல் - ஷுபம் துபே சேர்ந்தனர். இந்த ஜோடி சற்று அதிரடியாக ஆட முயற்சித்தது. ஆனால், ஷுபம் துபே அதிரடி காட்டிய நிலையில் அவரும் பாண்ட்யா பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் துருவ் ஜோரல் 11 பந்துகளில் 1 சிக்ஸருடன் 11 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த தீக்ஷனா 2 ரன்னில் அவுட்டாக 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 100 ரன்களை கடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. 

ஆர்ச்சர் அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசியதால் ராஜஸ்தான் 100 ரன்களை கடந்தது. ஆர்ச்சர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி ராஜஸ்தான் ரசிகர்களை ஆறுதல் படுத்தினார்.

ப்ளே ஆஃப்பில் மும்பை:

கடைசியில் ராஜஸ்தான் அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்காக தீபக் சாஹர், பும்ரா, பாண்ட்யா, கரண் சர்மா மிரட்டலாக பந்துவீசினார். குறிப்பாக, கரண் சர்மா தனது சுழலால் துருவ் ஜோரல், தீக்ஷனா, கார்த்திகேயா ஆகிய 3 பேரை அவுட்டாக்கினார்.

இந்த வெற்றி மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் மும்பை அணி 14 புள்ளிகளை எட்டியிருப்பதுடன் வலுவான ரன்ரேட்டை வைத்திருப்பதால் அவர்கள் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Embed widget