IPL 2025 MI vs GT: குஜராத் நடத்திய பவுலிங் அட்டாக்.. தட்டுத்தடுமாறி 155 ரன்களை எட்டிய மும்பை! டேபிள் டாப் யாரு?
IPL 2025 MI vs GT: குஜராத் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு மத்தியில் வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கால் 156 ரன்களை மும்பை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நடப்பாண்டை பொறுத்தவரையில் வலுவான அணிகளாக உலா வரும் குஜராத் - மும்பை அணிகள் இன்றைய போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் குஜராத் பந்துவீசியது.
அதிர்ச்சி தொடக்கம்:
பந்துவீச்சைத் தேர்வு செய்தததற்கு குஜராத்திற்கு பலன் கிடைத்தது. தொடக்க வீரரகள் ரியான் ரிக்கெல்டனை 2 ரன்னில் சிராஜும், ரோகித் சர்மாவை 7 ரன்னில் அர்ஷத் கானும் அவுட்டாக்கினர். அதன்பின்பு, வில் ஜேக்ஸ் - சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி பவர்ப்ளேவில் அற்புதமான கேட்ச் வாய்ப்பை குஜராத்திற்கு வழங்கியது.
சுழல் தாக்குதல்:
வில் ஜேக்ஸ் அளித்த 2 கேட்ச் மற்றும் சூர்யகுமார் யாதவ் காெடுத்த 1 கேட்டச்சை சாய் சுதர்சன், சிராஜ், சாய் கிஷோர் கோட்டைவிட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஜோடி அதிரடி காட்டியது. இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினார். இதனால், மும்பை ரன் ஏறியது. ஆனால் அப்போது சாய கிஷோர் இந்த ஜோடியை பிரித்தார். அவரது சுழலில் சிக்கிய சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த பிறகு அபாரமாக ஆடிய வில் ஜேக்ஸ் அரைசதம் விளாசினார். ஆனால், அரைசதம் விளாசிய சில நிமிடங்களில் அவரை ரஷீத்கான் அவுட்டாக்கினார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்பின்பு, மும்பையை தனது பந்துவீச்சால் குஜராத் கட்டுப்படுத்தியது.
காப்பாற்றிய கார்பின்:
திலக் வர்மாவை கோட்ஸி 7 ரன்னில் அவுட்டாக்க, கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை சாய் கிஷோர் காலி செய்தார். அவரது சுழலில் அபாயகரமான ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் அவுட்டானார். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு அதிரடி வீரர் நமன்தீரை பிரசித் கிருஷ்ணா 7 ரன்னில் அவுட்டாக்க 123 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது மும்பை.
ரன்கள் டார்கெட்:
கடைசி கட்டத்தில் மும்பைக்காக கார்பின் அதிரடி காட்டினார். அவரது அதிரடியால் மும்பை 150 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய கார்பின் 22 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் மும்பை அணி 155 ரன்களை எடுத்தது. குஜராத் அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாய் கிஷோர் 4 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும், 4 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ரஷீத்கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தி மும்பையை கட்டுப்படுத்தினர்.




















