KKR vs LSG: லக்னோவிற்கு எதிரான போட்டி; டாஸ் வென்ற கொல்கத்தா அணி!
IPL 2025: KKR vs LSG: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய (08.04.2025) கொல்கத்தா நைட் ரைடஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் ஸ்பென்சர் ஜான்சன் இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களை சொல்லிவிடலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் காத்திருக்கிறது தொடர்.
21-வது லீக் போட்டி
இந்தத் தொடரின் 21-வது லீக் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை அணியை அஜிங்கியா ரெகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது.
கொல்கத்தா, லக்னோ இரண்டு அணிகளும் இதுவரை நடைபெற்ற 4 போட்டியில் கொல்கத்தா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா 5-வது இடத்திலும் லக்னோ 6-வது இடத்திலும் இருக்கிறது.
கொல்கத்தா அணி - ப்ளேயிங் XI-ல் மாற்றம்
குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே , வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ப்ளேயிங் லெவன்:
மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ராம், நிக்கோலஸ் பூரன்,
ரிஷப் பந்த், ஆயுஷ் போதானி, டேவிட் மில்லர் , அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான் , திக்வேஷ் சிங்




















