டி-20 கிரிக்கெட் - விராட் கோலி புதிய சாதனை!
விராட் கோலி கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி முதன்முதலில் டெல்லி அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதுவரை 402 டி20 ஆட்டங்களில் விராட் கோலி ஆடி 12 ஆயிரத்து 983 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணி, ஐபிஎல் தொடர், உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
விராட் கோலி கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார். ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் 255 போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 101 ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார்.
இதுதவிர சிஎல்டி20 தொடரில் 15 போட்டிகளில் ஆடி 424 ரன்களையும் எடுத்துள்ளார்.
இந்திய அணிக்காக 125 டி20 போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 188 ரன்களை எடுத்துள்ளார். டெல்லி அணிக்காக 7 டி20 போட்டிகளில் ஆடி 270 ரன்களையும் எடுத்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலி 42 பந்துகளுக்கு 67 ரன் எடுத்தார். இதில் 2 சிக்ஸர், 8 பவுண்ட்ரிகள் அடங்கும்.
விராட் கோலி போட்டியில் 13 ரன்கள் எடுத்தபோது டி20 கிரிக்கெட் போட்டியில் 13 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற வரலாற்றை படைத்தார்.
சர்வதேச அரங்கில் 13 ஆயிரம் ரன்களை கடந்த 5வது வீரர் விராட் கோலி.
401 -டி-20 போட்டிகளில் விளையாடி 13014 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி