IPL 2025 DC vs GT: பறக்கவிட்ட பட்லர்.. டெல்லிக்கு கொள்ளி வைத்த குஜராத்! கடைசி வரை த்ரில்லர்
IPL 2025 GT vs DC: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி பட்லரின் அபாரமான பேட்டிங்கால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மோதின. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு கருண் நாயர், ஸ்டப்ஸ், அக்ஷர் படேல், அசுதோஷ் சர்மா ஆகியோரது அதிரடியால் 204 ரன்களை குஜராத்திற்கு இலக்காக நிர்ணயித்தது.
கில் அவுட்:
இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீருரம்., கேப்டனுமாகிய சுப்மன் கில் 7 ரன்னில் கருண் நாயரால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து, களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் சாய் சுதர்சனும் அதிரடி காட்ட ஓவருக்கு 10 ரன்கள் வீதம் அடித்தனர். அதிரடி காட்டிய சாய் சுதர்சன் 21 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 36 ரன்களுக்கு அவுட்டானார்.
ஃபார்முக்கு வந்த பட்லர்:
இதையடுத்து, பட்லர் - ரூதர்ஃபோர்டு ஜோடி சேர்ந்தனர். ரூதர்ஃபோர்டு நிதானமாகவும், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் அனுப்ப பட்லர் அதிரடி காட்டினார். இந்த ஜோடியைப் பிரிக்க ஸ்டார்க், முகேஷ்குமார், அக்ஷர் படேல், விப்ராஜ், குல்தீப் ஆகியோர் தொடர்ந்து பந்துவீசினார்.
ஆனால், மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்ததால் குஜராத் பேட்டிங் அவர்களது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. வேகம், சுழல் என மாறி, மாறி கேப்டன் அக்ஷர் படேல் பயன்படுத்தினார். ஆனால், அவர்களுக்கு அது பயன் அளிக்கவில்லை. மறுமுனையில் அதிரடி காட்டிய பட்லர் அரைசதம் விளாசினார்.
கடைசியில் திக் திக்:
ரூதர்ஃபோர்டும் அவ்வப்போது சிக்ஸர் விளாச கடைசி 18 பந்துகளில் குஜராத் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றிக்கு 8 பந்துகளில் 11 ரன் தேவைப்பட்டபோது ரூதர்ஃபோர்டு அவுட்டானார். அவர் 34 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதனால், கடைசி 6 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக மாயம் நிகழ்த்தியது போல ஸ்டார்க் இந்த போட்டியிலும் நிகழ்த்துவாரா? யார் வெற்றி பெறுவார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
திவேதியா மிரட்டல்:
ஆனால், முதல் பந்திலே திவேதியா சிக்ஸர் விளாசினார். இதனால், கடைசி 5 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டாவது பந்தை அவர் பவுண்டரிக்கு விளாசினார். இதையடுத்து, குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டார்க் 3.2 ஓவரில் 49 ரன்களையும், முகேஷ்குமார் 4 ஓவரில் 40 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். புள்ளிப்பட்டியலில் குஜராத் முதலிடத்தில் வலுவாக உள்ளது. பட்லர் 54 பந்தகளில் 11 பவுண்டரி 4 சிக்ஸருடன் 97 ரன்களும், ராகுல் திவேதியா 3 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 11 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

