IPL 2025 CSK vs DC: கில்லியாக மாறிய டெல்லி! அபிஷேக், ராகுல் அட்டகாசம்.. சேசிங் செய்யுமா சென்னை?
IPL 2025 CSK vs DC: அபிஷேக் போரல் அதிரடி, கே.எல்.ராகுல் அரைசதத்தால் சென்னைக்கு டெல்லி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

IPL CSK vs DC: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளம் இன்று நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதிரடி காட்டிய அபிஷேக் போரல்:
முதல் ஓவரை கலீல் அகமது சிறப்பாக வீசியதுடன் தொடக்க வீரர் ஜேக்கை அவுட்டாக்கினார். ஆனால், அடுத்து வந்த கே.எல்.ராகுல் - அபிஷேக் போரல் ஜோடி மிகவும் அபாரமாக ஆடினர். குறிப்பாக அபிஷேக் போரல் முகேஷ் செளத்ரி வீசிய ஒரே ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். மறுமுனையில் கே.எல்.ராகுலும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார்.
இதனால், டெல்லியின் ரன்ரேட் நன்றாக எகிறியது. ஓவருக்கு 10 ரன்கள் வீதம் அவர்கள் ஆடினர். சிறப்பாக ஆடிய அபிஷேக் போரல் ஜடேஜா சுழலில் சிக்கினார். அவர் 20 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதன்பின்னர், வந்த கேப்டன் அக்ஷர் படேலும் ராகுலுக்கு ஒத்துழைப்பு தந்தார்.
ராகுல் அதிரடி அரைசதம்
அதிரடி காட்ட முயற்சித்த அக்ஷர் படேல் 14 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். ஆனாலும், மறுமுனையில் தொடக்கம் முதல் அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு ரிஸ்வி ஒத்துழைப்பு தந்த ரிஸ்வி 15 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
150 ரன்களை கடந்து சென்ற டெல்லி அணியை கடைசியில் சென்னை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். கலீல் அகமது 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், முகேஷ் செளத்ரி பந்துவீச்சையும், நூர் அகமது பந்துவீச்சையும் டெல்லி அணி விளாசியது.
184 ரன்கள் டார்கெட்:
கடைசி ஓவரில் ராகுல் அவுட்டானார். 51 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்தார். முகேஷ் செளத்ரி 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கினாலும், கடைசி ஓவரை பதிரானா கட்டுக்கோப்பாக வீசினார். இதனால், 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 183 ரன்களை எடுத்தது. சென்னை அணிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் செளத்ரி 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். ஜடேஜா 2 ஓவரும், அஸ்வின் 3 ஓவரும் வீசினர். கடந்த 2 போட்டியிலும் தோல்வி அடைந்த சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

