IPL 2025 Auction: ஐபிஎல் ஏலம்..எந்த நாட்டில் இருந்து எத்தனை பேர்! முழு லிஸ்ட் உள்ளே..
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எத்தனை வீரர்கள் IPL ஏலத்தில் பங்கேற்கின்றனர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எத்தனை வீரர்கள் IPL ஏலத்தில் பங்கேற்கின்றனர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஐபிஎல் 2025:
ஐபிஎல் மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் (1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாடுகள்) ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் 320 கேப்டு பிளேயர்கள், 1,224 அன்கேப் பிளேயர்கள் மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் உள்ளனர். முன்னதாக, இதில் அதிகபட்சமாக பஞ்சாப் அணி 110 கோடியே 50 லட்சம் ரூபாய் உடன் மெகா ஏலத்தில் பங்கேற்கிறது.
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எத்தனை வீரர்கள்:
ஆர்சிபி அணி 83 கோடி ரூபாயும், குஜராத் 69 கோடி ரூபாயும், சிஎஸ்கே 55 கோடி ரூபாயும், மும்பை இந்தியன்ஸ் 45 கோடி ரூபாயுடன் ஏலத்தில் பங்கேற்கிறது. இச்சூழலில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எத்தனை வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றனர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
தென்னாப்பிரிக்காவில் இருந்து அதிகபட்சமாக 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவிலிருந்து 76 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து 52 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 39 வீரர்களும், வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருந்து 33 வீரர்களும், இலங்கையிலிருந்து 29 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் இருந்து 29 வீரர்களும், வங்கதேசத்திலிருந்து 13 வீரர்களும், நெதர்லாந்தில் இருந்து 12 வீரர்களும், அமெரிக்காவிலிருந்து 10 வீரர்களும், அயர்லாந்தில் இருந்து 9 வீரர்களும் பங்கேற்கின்றனர்.
Country wise players registered for IPL 2025 auction:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 5, 2024
South Africa - 91.
Australia - 76.
England - 52.
NZ - 39.
West Indies - 33.
Afghanistan - 29.
SL - 29.
Bangladesh - 13.
Netherlands - 12.
USA - 10.
Ireland - 9.
Zimbabwe - 8.
Canada - 4.
Scotland - 2.
UAE - 1.
Italy - 1.
இதே போன்று, ஜிம்பாபேவில் இருந்து 8 வீரர்களும் கனடாவில் இருந்து 4 வீரர்களும் ஸ்காட்லாண்டில் இருந்து 2 வீரர்களும் இத்தாலியிலிருந்து 1 வீரரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 1 வீரரும் இந்த ஏலத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்து ஒரு வீரரும் இந்த ஏலத்தில் பதிவு செய்யவில்லை. முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.