மேலும் அறிய

Yuzvendra Chahal: இன்னும் 3 விக்கெட்கள் போதும்! ஐ.பி.எல்.லில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் சாஹல்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 விக்கெட்கள் எடுத்தார் யுஸ்வேந்திர சாஹல்.

ஐ.பி.எல். 2024ன் 24வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சாஹல், சுப்மன் கில் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து, வரும் போட்டியில் இன்னும் 3 விக்கெட்களை வீழ்த்தினால் புதிய சாதனை படைக்கலாம். 

உண்மையில், இனி வரும் போட்டிகளில், சாஹல் ஐபிஎல்லில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைக்கலாம். ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 197 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் சாஹல். நேற்று குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் தனது விரல்களை சுழட்டி வித்தை காமித்து, இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்ததாக, வரும் போட்டிகளில் இன்னும் 3 விக்கெட்களை வீழ்த்தினால் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை எட்டிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். 

இந்த ஐபிஎல்லில் யுஸ்வேந்திர சாஹல் இதுவரை: 

நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை, சாஹல் தனது சுழற்பந்து வீச்சால் பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது வலையில் சிக்க வைத்து, வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சாஹல், நல்ல பார்மில் இருந்தார். இருப்பினும், 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இவர் இடம்பெறவில்லை. கடந்த 2023 ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனிலும் அவர் தனது ஃபார்மை தொடர்ந்து அடித்தளமிட்டு வருகிறார். 

இதுவரை சாஹலின் ஐபிஎல் வாழ்க்கை: 

2013 இல் அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல் இதுவரை ஐபிஎல்லில் 150 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகளில் 149 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 21.26 சராசரியில் 197 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் 7.64 என்ற எகானமியில் ரன்களை விட்டுகொடுத்துள்ளார்.  ஐபிஎல் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் சாஹலும் ஒருவர். 

33 வயதான யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் 2022ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைவதற்கு முன், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், 197 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 113 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 36 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்களை எடுத்துள்ளார். 2013ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ஒரே போட்டியில் விளையாடிய சாஹல், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளர்கள்:

  1. யுஸ்வேந்திர சாஹல் (மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ்) - 150 போட்டிகளில் 197 விக்கெட்டுகள்.
  2. பியூஷ் சாவ்லா ( பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்) - 185 போட்டிகளில் 181 விக்கெட்டுகள்.
  3. அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 161 போட்டிகளில் 173 விக்கெட்டுகள்.
  4. புவனேஷ்வர் குமார் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, புனே வாரியர்ஸ் இந்தியா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 165 போட்டிகளில் 173 விக்கெட்கள்
  5. ரவிசந்திரன் அஸ்வின் (சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்) - 201 போட்டிகளில் 172 விக்கெட்கள்

மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவரான ஷேன் வார்னேவின் 57 விக்கெட்களையும் நேற்று முறியடித்தார் சாஹல்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
Embed widget