RR vs GT Match Highlights: சொந்த மண்ணில் வீழ்ந்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் வென்ற குஜராத்!
IPL 2024 RR vs GT Match Highlights: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
![RR vs GT Match Highlights: சொந்த மண்ணில் வீழ்ந்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் வென்ற குஜராத்! IPL 2024 RR vs GT Match Highlights Gujarat Titans Won Rajasthan Royals By 3 Wickets RR vs GT Match Highlights: சொந்த மண்ணில் வீழ்ந்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் வென்ற குஜராத்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/12104be75e4a38dee2303948ce8a0df51712774002994102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
17வது ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் அணி குஜராத் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்த்திருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ரியான் பிராக் 48 பந்தில் மூன்று பவுண்டரி ஐந்து சிக்ஸருடன் சேர்த்து 76 ரன்கள் எடுத்திருந்தார். இறுதி வரை களத்தில் இருந்த சஞ்சு சாம்சன் 38 பந்தில் 7 பவுண்டரி இரண்டு சிக்ஸருடன் 68 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
அதன் பின்னர் 197 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிதானமாகவே இலக்கைத் துரத்த தொடங்கியது. குஜராத் அணியின் இன்னிங்ஸை கேப்டன் சுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் தொடங்கினர். பவர்ப்ளே வரையில் நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் அதன் பின்னர் பவுண்டரிகள் விளாச முயற்சி செய்து தனது விக்கெட்டினை போட்டியின் 9வது ஓவரில் இழந்தார்.
அதன்பின்னர் களத்திற்கு வேட் வந்து 5 பந்துகளைச் சந்தித்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 77 ரன்கள் சேர்த்திருந்தது. மழை தொடர்ந்து பெய்திருந்தால், டக்வெர்த் லூயிஸ் விது முறைப்படி, குஜராத் அணி 86 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் 77 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்ததால், மழை தொடர்ந்து பெய்தால் ராஜஸ்தான் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியிருக்கும்.
ஆனால் மழை சிறுது நேரத்தில் விட்டதால், ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. குறிப்பாக எந்த ஓவரும் குறைக்கப்படததால், குஜராத் அணிக்கான இலக்கிலும் மாற்றம் செய்யப்படவில்லை. மழைக்குப் பின் களத்திற்கு வந்த குஜராத் அணி பேட்ஸ்மேன்களில் மேத்யூ வெட் 11வது ஓவரின் முதல் பந்தில் இன்சைடு எட்ஜ் மூலம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதற்கடுத்து வந்த அபினோவ் மனோகர் அதே ஓவரின் நான்காவது பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியாறினார்.
இதனால் ஆட்டம் ஒரு ஓவரில் ராஜஸ்தான் அணியின் முழு கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக ரசிகர்கள் யோசிக்கத்தொடங்கினர். ஆனால், அதிரடியாக ஆட முயற்சி செய்து விஜய் சங்கர் தனது விக்கெட்டினை யுஸ்வேந்திர சஹால் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். குஜராத் அணியின் கேப்டன் கில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச்செய்வார் என எதிர்பார்க்கப்பட்டபோது, கில் தனது அரைசதத்தினை சிறப்பாக விளாசியது மட்டும் இல்லாமல், ஆட்டத்தின் தன்மையை கருத்தில் கொண்டு அதிரடியாகவும் விளையாடி வந்தார்.
போட்டியின் 16வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய கில் மூன்றாவது பந்தில் தனது விக்கெட்டினை 44 பந்தில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இதனால் குஜராத் அணியின் நம்பிக்கை ராகுல் திவாட்டியா மற்றும் இம்பேக்ட் ப்ளேயர் ஷாருக்கான் இணைந்தனர்.
கடைசி மூன்று ஓவர்களில் குஜராத் அணியின் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)