Mumbai Indians: மும்பைக்கு நாமம்; குரூப்பா ஸ்கெட்ச் போட்ட ஸ்டார் ப்ளேயர்கள்; அதிர்ச்சியில் ”ஒன் ஃபேமலி”!
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இந்த சீசனுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல் 2024:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இதுவரை 57 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை 16 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் இடத்திலும், அதே 16 புள்ளிகளை பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 வது இடத்திலும் இருக்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வது இடத்திலும் உள்ளது. ஆனால், கடந்த 5 முறை ஐ.பி.எல் கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அதன்படி மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதோடு முதல் அணியாக பிளேஃஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேற்றப்பட்டுள்ளது.
மும்பை அணியில் மீண்டும் குழப்பம்:
2013 முதல் முதல் கடந்த வருடம் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வழி நடத்திய ரோகித் சர்மா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது தான் இந்த தோல்விக்கான முதல் காரணம் என்று கூறப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த போது ஹர்திக் பாண்டியா சிறப்பாக அணியை வழிநடத்தியதால் தான் மும்பை அணியின் கேப்டனாக இந்த சீசனில் நியமிக்கப்பட்டார். இதனால் தான் மும்பை அணிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள பிரச்னைகள் குறித்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தனியாக அணி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அதில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதேநேரம் இதனை முழுவதுமாக ஏற்க மறுத்த அம்பானி குடும்பம் இந்த ஒரு சீசன் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை ஹர்திக் பாண்டியா தான் கேப்டன். அடுத்த சீசனிலும் ஹர்திக் பாண்டியாவிற்கு தான் கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அணியில் இருந்து விலகும் ரோகித் சர்மா?
தங்களது கோரிக்கைகளை அணி நிர்வாகம் ஏற்கமறுத்திருப்பது ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மெகா ஏலத்தில் முன்பு தங்களை அணியை விட்டு விடுவிக்க வேண்டும் என்றும் மூன்று வீரர்களும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒன் ஃபேமலி என்று ரசிகர்களாக அறியப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் இப்போது உச்சக்கட்ட குழப்பம் நிலவுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி எப்படிபட்ட முடிவுகளை இனி எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.