IPL 2024: 5 முறை கோப்பையை வென்ற கேப்டன்கள்...இளம் வீரர்களின் கேப்டன்சியில் முதல்முறை!
தலா 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோர் முதன் முறை வீரராக மட்டும் விளையாட உள்ளனர்.
ஐ.பி.எல் திருவிழா:
ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அதிகம் உச்சரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள் அனைவரும் அறிந்ததே. ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பெயர். மற்றொன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர். இந்த அணிகளுக்கு இருக்கும் ரசிகர்களை விட இந்த இரண்டு வீரர்களுக்கும் என்று தனி ரசிகரகள் பட்டாளமே இருக்கிறது. இவர்கள் தங்கள் வீரர்களுக்காக சமூக வலைதளங்களில் சண்டை போடுவதெல்லாம் தனிக்கதை.
5 முறை ஐ.பி.எல் கோப்பை:
அந்த வகையில் 2010, 2011, 2018,2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வென்று கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் வென்று கொடுத்தவர்.
இப்படி ஐ.பி.எல் சீசன்களில் அதிக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன்கள் என்ற பெருமையை இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தான் இருவரும் தங்கள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு முதல் தடவையாக ஒரு வீரராக மட்டும் களம் இறங்க இருக்கின்றனர். முன்னதாக கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்திய ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு எடுத்தது. பின்னர் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டானக அறிவித்தது.
இளம் வீரர்களின் கேப்டன்சி
இச்சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒற்றை அடையாளமாக இருக்கும் எம்.எஸ்.தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது அந்த அணி நிர்வாகம். அதன்படி புதிய கேப்டனாக ருதுராஜ் ஹெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார். எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா ஐ.பி.எல் மட்டும் இன்றி சர்வதேச அளவில் இந்திய அணியையும் வழிநடத்தியவர்கள். இப்படிப்பட சூழலில் தான் இருவரும் கேப்டன்களாக இல்லாமல் தங்களை விட இளம் வீரர்களின் கேப்டன்சியில் விளையாட உள்ளனர்.
மேலும் படிக்க: IPL 2024: நாளை முதல் தொடங்கும் ஐபிஎல் 2024.. அனைத்து அணிகளின் அடேங்கப்பா 11 வீரர்கள் இவர்கள்தான்..!
மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறை! வீரர்களாக மட்டும் களம் காணும் 3 ஜாம்பவான்கள்!