RCB vs LSG LIVE Score: 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி; தொடர் தோல்வியில் பெங்களூரு தவிப்பு!
IPL 2024 RCB vs LSG LIVE Score Updates: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.

Background
17வது ஐபிஎல் தொடரில் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று அதாவது ஏப்ரல் இரண்டாம் தேதி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் மோதவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தனது நான்காவது லீக் போட்டியில் விளையாடவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளில் பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் பெங்களூரு அணி நடப்பு தொடரில் தனது சொந்த மைதானத்தில் மூன்றாவது போட்டியில் தொடர்ந்து விளையாடவுள்ளது. கடந்த போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியிடம் மிகவும் மோசமான முறையில் தோல்வியைச் சந்தித்தது. அதாவது அந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இன்று களமிறங்குகின்றது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியைப் பொறுத்தவரை தெளிவான கேம் ப்ளானுடன் கடந்த போட்டியில் விளையாடினர். குறிப்பாக அணியின் வெற்றிக்காக என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற மனநிலையில் விளையாடியது மட்டும் இல்லாமல், இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகின்றனர். புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள லக்னோ அணி கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை 21 ரன்னில் வீழ்த்தியது. இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இரு அணிகளும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்களது வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பஞ்சாப் அணியை வீழ்த்திய அணிகள் மோதிக்கொள்வதால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரு அணிகளிலும் உள்ள பிரச்னை என்றால் பந்து வீச்சைக் கூறலாம். இதில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
RCB vs LSG LIVE Score: லக்னோ அசத்தல் வெற்றி
பெங்களூரு அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
RCB vs LSG LIVE Score: லம்ரோர் அவுட் - உடைந்த நம்பிக்கை!
13 பந்தில் 33 ரன்கள் குவித்த மகிமால் லம்ரோர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதன் மூலம் பெங்களூரு அணியின் தோல்வி உறுதியாகியுள்ளது.




















