(Source: ECI/ABP News/ABP Majha)
MS Dhoni: கடைசி ஓவரில் எதிரணியை கலங்கச்செய்யும் தோனி.. அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடம்!
MS Dhoni : வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் வெறும் நான்கு பந்துகள் மட்டுமே விளையாடிய தோனி, 3 சிக்ஸர்கள் உள்பட 20 ரன்களை எடுத்தார்.
MS Dhoni : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி சில பந்துகளில் அதிரடியாக ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் சென்னை சூப்பர் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் வெறும் நான்கு பந்துகள் மட்டுமே விளையாடிய தோனி, 3 சிக்ஸர்கள் உள்பட 20 ரன்களை எடுத்தார். இதன் காரணமாகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், சிவம் துபே 66 ரன்களும் எடுத்தனர்.
90 முறைக்கு மேல் ஆட்டமிழக்காமல் அதிரடி:
ஐபிஎல் வரலாற்றில் 20வது ஓவரில் தோனி இதுவரை 756 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை 20வது ஓவரில் 309 பந்துகளை சந்தித்துள்ள அவர், 51 பவுண்டரிகள் மற்றும் 64 ரன்கள் உதவியுடன் 756 ரன்களை 244.66 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். மேலும், 20வது ஓவரில் அதிரடியாக விளையாடியுள்ள தோனி, தனது ஐபிஎல் கேரியரில் மொத்தம் 91 முறை ஆட்டமிழக்காமல் ரன்களை குவித்துள்ளார்.
ரன்கள்: 756
பந்துகள்: 309
ஸ்ட்ரைக் ரேட்: 244.66
4s/6s: 51/64
Most sixes in the 20th over in IPL history:
— Johns. (@CricCrazyJohns) April 15, 2024
1) MS Dhoni - 64*
2) Kieron Pollard - 33
Dhoni, The Greatest finisher ever. 🐐 pic.twitter.com/VX77mmw6GW
இந்த சீசனில் 340க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்:
ஐபிஎல் வரலாற்றில் தோனி இதுவரை, ஒரு சதம் கூட அடித்தது இல்லை என்றாலும், 24 முறை அரைசதம் அடித்து 5141 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 353 பவுண்டரிகள் மற்றும் 245 சிக்ஸர்களும் அடங்கும். ஐபிஎல் 202 சீசனில் 4 முறை பேட்டிங் செய்து இதுவரை 20வது ஓவரில் 12 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இந்த சீசனில் 20வது ஓவரில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 341.66 ஆகும்.
ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முதல் முறையாக அதிரடி:
ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக தோனி, இதுவரை சிறப்பாக விளையாடியது இல்லை. இந்த போட்டிக்கு முன்னதாக பாண்டியா பந்தில் தோனி, 27 பந்துகளில் விளையாடி 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஒரு முறை அவுட்டாகியுள்ளார். ஆனால், நேற்றி 4 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் குவித்தார். இதன்மூலம், ஒட்டுமொத்தமாக, பாண்டியாவுக்கு எதிராக 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் தோனியில் சில மைல்கல்கள்:
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது எம்எஸ் தோனி 5000 ரன்களை கடந்தார். மும்பைக்கு எதிராக தோனி ஆட்டமிழக்காமல் 20* ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் 5 ஆயிரம் ரன்களை எட்டினார். சென்னை அணிக்காக 5 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை தோனி பெற்றார். முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். சுரேஷ் ரெய்னா 195 இன்னிங்ஸ்களில் 5528 ரன்கள் எடுத்துள்ளார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி 250 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த எண்ணிக்கையை தொட்ட முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார். தோனி 2008ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார். மேலும் அவரது தலைமையின் கீழ் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த சீசனில் எம்எஸ் தோனி ஒரு வீரராக விளையாடும் நிலையில், கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது.