IPL 2024 CSK vs SRH: டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச்சு தேர்வு: அதிரடி பேட்டிங்கை தொடங்குமா சி.எஸ்.கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று விளையாடுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் சீசன் 17:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் தலா ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்து, தொடரின் பாதி போட்டிகள் முடிந்துள்ளன. தற்போது இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
சென்னை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் நான்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டியிலும் அந்த அணி தோல்வியுற்றுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியிலும் மண்ணை கவ்வியது. அதற்கு பழிவாங்கும் நோக்கிலும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற முனைப்பிலும் சென்னை அணி இன்று களமிறங்கி உள்ளது.
மறுமுனையில், பேட்டிங்கை மிகவும் சாதாரணம் விஷயம் என்பது போன்று காட்டி ஹைதராபாத் அணி எதிரணிகளை அச்சுறுத்தி வருகிறது. இமாலய ரன்களை குவிப்பது மிக எளிய விஷயமாக செய்து வருகிறது. அதேநேரம், கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், எதிர்பாராத விதமாக பெங்களூரு அணியிடம் தோல்வியுற்றது. இதனால் இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணி அதிக ஆர்வம் காட்டுகிறது.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி:
இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இமாலய இலக்கை நிர்ணயிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர் ), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்):
அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் , ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர் ), நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், டி நடராஜன்