IPL 2024 Points Table: ராஜஸ்தானை தட்டிவிட்ட கொல்கத்தா - மீண்டும் டாப் 4ல் சென்னை - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம்
IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
IPL 2024 Points Table: ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் அபார வெற்றி பெற்றன.
பிளே-ஆஃப் ரேஸில் சென்னை:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 54 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. வார இறுதியான நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. முதலில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167 ரன்கள் மட்டுமே குவித்தது. இருப்பினும் அபாரமான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை, வெறும் 139 ரன்களுக்குள் சுட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தனது பிளே-ஆஃப் வாய்ப்பையும் நீட்டித்துள்ளது. மேலும், மூன்று ஆண்டுகளுகுப் பிறகு முதல்முறையாக சென்னை அணி பஞ்சாபை வீழ்த்தி அசதுத்தியுள்ளது.
ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளிய கொல்கத்தா:
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 235 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி வெறும் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், நீண்ட நாட்களாக தொடர்ந்து முதலிடம் வகித்து வந்த ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி, ரன் ரேட் அடிப்படையில் 16 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பும் மிகவும் பிரகாசமடைந்துள்ளது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரங்கள்:
எண் | அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
1 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 11 | 8 | 3 | 16 |
2 | ராஜஸ்தான் ராயலஸ் | 10 | 8 | 2 | 16 |
3 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 11 | 6 | 5 | 12 |
4 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 10 | 6 | 4 | 12 |
5 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 11 | 6 | 5 | 12 |
6 | டெல்லி கேபிடல்ஸ் | 11 | 5 | 6 | 10 |
7 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 11 | 4 | 7 | 8 |
8 | பஞ்சாப் கிங்ஸ் | 11 | 4 | 7 | 8 |
9 | குஜராத் டைட்டன்ஸ் | 11 | 4 | 7 | 8 |
10 | மும்பை இந்தியன்ஸ் | 11 | 3 | 8 | 6 |
இன்றைய போட்டி:
இன்று நடைபெறும் தொடரின் 55வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். கடைசி இடத்தில் உள்ள மும்பை அணி வெற்றி பெற்றால், அதிகபட்சமாக 8வது இடத்திற்கு முன்னேறக்கூடும். நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை அணி இன்று களம் காண உள்ளது. அதேநேரம், மும்பை அணி ஏற்கனவே தனது பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
அதிக ரன் சேர்த்த வீரர்கள்:
- விராட் கோலி - 542 ரன்கள்
- ருதுராஜ் கெய்க்வாட் - 541 ரன்கள்
- நரைன் - 461 ரன்கள்
- கே.எல். ராகுல் - 431 ரன்கள்
- சால்ட் - 429 ரன்கள்
அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:
- ஜஸ்பிரித் பும்ரா - 17 விக்கெட்டுகள்
- ஹர்ஷல் படேல் - 17 விக்கெட்டுகள்
- சிவி வருண் - 16 விக்கெட்டுகள்
- நடராஜன் - 15 விக்கெட்டுகள்
- அர்ஷ்தீப் சிங் - 15 விக்கெட்டுகள்