IPL 2023: விக்கெட்டும் எடுத்து, ரன்னை விட்டுகொடுத்தா எப்படி? மோசமான சாதனையில் துஷார் தேஷ்பாண்டே முதலிடம்!
நடப்பு தொடரில் அதிக ரன்களை விட்டுகொடுத்தவர்கள் பட்டியலிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல பந்துவீச்சாளர்களை இந்திய அணிக்கு கொடுத்துள்ளது. தீபக் சாஹர், மோகித் சர்மா, அஷ்வின், ஜடேஜா என பட்டியல் நீண்டு கொண்டே சொல்லும். அப்படி இருக்க, புதிய வரவாக இந்த ஆண்டு தோனி தலைமையிலான சிஎஸ்கே துஷார் தேஷ்பாண்டேவை அடையாளம் கண்டுள்ளது. இந்த தொடரில் துஷார் தேஷ்பாண்டே அதிக விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டாலும், மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அது என்ன என்பதை கீழே பார்க்கலாம்..
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் துஷார் தேஷ்பாண்டே 10 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் குஜராத் அணியை சேர்ந்த முகமது ஷமி 9 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளுடம் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல், நடப்பு தொடரில் அதிக ரன்களை விட்டுகொடுத்தவர்கள் பட்டியலிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே முதலிடத்தில் உள்ளார். 16வது சீசனில் துஷார் தேஷ்பாண்டே இதுவரை 9 போட்டிகளில் விளையாடி மொத்தம் 369 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பொருளாதார விகிதம் 11.07 ஆக உள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த 9 போட்டிகளில் விளையாடி 315 ரன்கள் விட்டுகொடுத்து இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் அணியை சேர்ந்த சாம் கர்ரன் 9 போட்டிகளில் விளையாடி 304 ரன்கள் விட்டுகொடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இந்த தொடரில் துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷல் பட்டேல், சாம் கர்ர்ன் தவிட வேற எந்தவொறு பந்துவீச்சாளரும் 300 ரன்களுக்கு மேல் விட்டுகொடுக்கவில்லை.
இதுமட்டுமின்று, அதிக சிக்ஸ்களை விட்டுகொடுத்தோர் பட்டியலிலும் துஷார் தேஷ்பாண்டேவும் முதலிடத்தில் உள்ளார். இந்த சீசனில் இவர் 21 சிக்ஸர்களை விட்டுகொடுத்து முதலிடத்தில் உள்ளார்.
27 வயதான துஷார் தேஷ்பாண்டேவிற்கு இது மூன்றாவது ஐபிஎல் சீசனாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2020 தொடரில் 5 போட்டிகளிலும், ஐபிஎல் 2022 தொடரில் 2 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த சீசனில் துஹார் தேஷ்பாண்டே மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தேஷ்பாண்டே 54 ரன்களை விட்டுகொடுத்தார். கடந்த ஏப்ரல் 21ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகு எதிரான போட்டியில் தேஷ்பாண்டே எந்த விக்கெட்கையும் வீழ்த்தவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழு அணி விவரம்:
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ஷேக் ரஷீத், நிஷாந்த் சித்து