மேலும் அறிய

IPL purple cap: பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஐபிஎல்.. சவால் கொடுத்து ஊதா தொப்பியை வென்ற பந்துவீச்சாளர்கள்

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, ஊதா நிற தொப்பியை வென்ற வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர்களுக்கு, ஊதா நிற தொப்பி விருதாக வழங்கப்படுகிறது. அதனை வெல்லும் வீரர்களுக்கு  ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.

ஐபிஎல் ஊதா தொப்பி:

ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் நாலாபுறமும் சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசி ரன் மழை பொழிவதை காணவே பெரும்பாலான ரசிகர்கள் மைதானங்களிலும், தொலைக்காட்சிகளுக்கு முன்பாகவும் குவிகின்றனர். ஆனாலும், சில பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து, தங்கள் அணிக்கு வெற்றியை தேடி தருவதும் உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு சீசனிலும் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர்களுக்கு, ஊதா நிற தொப்பி வழங்கி கவுரவிப்பதோடு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

01. ஷோஹைல் தன்வீர் - ராஜஸ்தான், 2008

ஐபிஎல் அறிமுக தொடரில் பாகிஸ்தான் வீரர்களும் விளையாட அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு விளையாடிய பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான தன்வீர், சிறப்பாக செயல்பட்டு அந்த அணி கோப்பையை கைப்பற்ற உதவினார். அந்த தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய தன்வீர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை தனதாக்கினார்.

02. ஆர்.பி. சிங் - டெக்கான் சார்ஜர்ஸ், 2009

தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தவர் ஆர்.பி. சிங். அந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய அவர், 23 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை வென்றார்.

03. பிரக்யான் ஓஜா - டெக்கான் சார்ஜர்ஸ், 2010

2010ம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின், லீக் சுற்றின் முடிவில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 16 புள்ளிகள் உடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. இதற்கு முக்கிய காரணமாக அந்த அணிக்காக 16 போட்டிகளில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா, 21 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை பெற்றார்.

04. லசித் மலிங்கா - மும்பை, 2011

2011ம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய இலங்கையை சேர்ந்த லசித் மலிங்கா, 16 போட்டிகளில் விளையாடி அந்த தொடரிலேயே அதிகபட்சமாக 28 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

05. மோர்னே மார்கல் - டெல்லி, 2012

ஐபிஎல் தொடரின் 5வது சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய மார்கல், 16 போட்டிகளில் பங்கேற்று தொடரிலேயே அதிகபட்சமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

06. த்வெயின் பிராவோ - சென்னை, 2013,15

சென்னை அணிக்காக விளையாடிய த்வெயின் பிராவோ 18 போட்டிகளில் பங்கேற்று 32 விக்கெட்களை வீழ்த்தி, ஊதா தொப்பியை தனதாக்கினார். அதோடு ஒரு தொடரில் ஒரு நபரால் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள் எனும், அவரது சாதனை இதுநாள் வரையில் தகர்க்கப்படவில்லை. அதைதொடர்ந்து, 2015ம் ஆண்டும் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஊதா தொப்பியை கைப்பற்றினார்.

07. மோஹித் சர்மா - சென்னை, 2014

அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடிய மோஹித் சர்மா, 23 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஒரே அணியை சேர்ந்த வீரர்கள், தொடர்ந்து மூன்று முறை ஊதா கோப்பையை வெல்வது ஐபிஎல் வரலாற்றில் இந்த ஒருமுறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 

08. புவனேஷ்குமார் - ஐதராபாத், 2016,17

ஐதராபாத் அணிக்காக விளையாடி 2016 மற்றும் 2017 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகளும், புவனேஷ்வர் குமார் ஊதா தொப்பியை கைப்பற்றினார். அந்த தொடர்களில் முறையே அவர் 23 மற்றும் 26 விக்கெட்களை வீழ்த்தினார். அதோடு, தொடர்ந்து இரண்டு முறை ஊதா கோப்பையை வென்ற ஒரே வீரர் எனும் பெருமையும் புவனேஷ்வர் குமாரையே சேரும்.

09. ஆண்ட்ரூ டை - பஞ்சாப், 2018

பஞ்சாப் அணிக்காக களமிறங்கி 14 போட்டிகளில் விளையாடிய ஆண்ட்ரூ டை, அந்த தொடரில் அதிகபட்சமாக 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை வென்றார்.

10. இம்ரான் தாஹிர் -  சென்னை, 2019

சென்னை அணிக்காக விளையாடிய தென்னாப்ரிக்காவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹீர், 17 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 26 விக்கெட்களை வீழ்த்தினார்.

11. ககிசோ ரபாடா -  டெல்லி, 2020

டெல்லி அணிக்காக 17 போட்டிகளில் களமிறங்கி, அந்த தொடரிலேயே அதிகபட்சமாக 30 விக்கெட்களை வீழ்த்தி ஊதா தொப்பியை தனதாக்கினார் தென்னாப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா

12. ஹர்ஷல் படேல் - பெங்களூரு, 2021 

பெங்களூரு அணிக்காக வெறும் 15 போட்டிகளில் மட்டுமே களமிறங்கி, 32 விக்கெட்களை வீழ்த்தி ஊதா தொப்பியை வென்றார். அதோடு, ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பிராவோவின் சாதனையையும் ஹர்ஷல் படேல் சமன் செய்தார்.

13. சாஹல் - பெங்களூரு, 2022

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதல் முறையாக களமிறங்கிய சாஹல், 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதோடு ஊதா தொப்பியையும் தனதாக்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget