IPL 2023: சென்னை அணிக்கு எதிராக 20வது ஓவரை வீசிய இரண்டு ஆர்.சி.பி. பவுலர்கள்; காரணம் இதுதான்..!
ஒரே ஓவரில் இரண்டு நோ - பால் வீசியதால் பெங்களூரு அணியின் பந்து வீச்சளர் ஹர்ஷல் பட்டேலுக்கு பந்து வீச தடை விதிக்கப்பட்டது.
![IPL 2023: சென்னை அணிக்கு எதிராக 20வது ஓவரை வீசிய இரண்டு ஆர்.சி.பி. பவுலர்கள்; காரணம் இதுதான்..! IPL 2023: Harshal Patel removed from bowling back to back no ball replaced by Maxwell know details IPL 2023: சென்னை அணிக்கு எதிராக 20வது ஓவரை வீசிய இரண்டு ஆர்.சி.பி. பவுலர்கள்; காரணம் இதுதான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/b70659460d54285d137df88e1535d9f81681747987960224_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் தொடரில் மிகவும் கவனிக்கப்படும் போட்டிகளில் ஒன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒன்று. இம்முறை இரு அணிகளும் வேறு வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளதால் ஒரு போட்டி மட்டுமே லீக் சுற்றில் இரு அணிகளும் மோதும். இந்த போட்டி இன்று (ஏப்ரல் 17) பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டி தொடக்கம் முதல் அதிரடியாக சென்று கொண்டு இருந்தது. சென்னை அணியின் அபாரமான பேட்டிங்கால், இன்றைய போட்டியில் இந்த பவுலர் சிறப்பாக பந்து வீசினார் என அடையாளம் காட்ட முடியாதபடி ரன்களை வாரி வழங்கியதுடன். விக்கெட்டுகளும் வீழ்த்த சிரமப்பட்டனர். 18 ஓவர்களிலேயே சென்னை அணி 200 ரன்களை கடந்து இருந்தது. இந்நிலையில் போட்டியின் கடைசி ஓவரை ஹர்சல் பட்டேல் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை நோபால வீச, அதற்கு ஃப்ரி - ஹிட்டும் வழங்கப்பட்டது. மூன்றாவது பந்தை வைடாக வீச, அதற்கு ரீ - பால் வீசினார். அந்த பந்தையும் நோ -பாலா வீசினார்.
ஐபிஎல் போட்டி விதிகளின் படி, பவுலர் ஒரே ஓவரில் இரண்டு நோ- பால் வீசினால், அவர் அந்த போட்டியில் மேற்கொண்டு பந்து வீச முடியாது. இதனால், ஹர்சல் பட்டேலால் அந்த ஓவரை முழுமையாக வீச முடியவில்லை. அதனால், அந்த ஓவரின் அடுத்த நான்கு பந்துகளை மேக்ஸ்வெல் வீசினார். ஹர்சல் பட்டேல் 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து 36 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)