மேலும் அறிய

GT vs DC Match Highlights: தமிழர்கள் அசத்தல்.. மில்லர் அதிரடி.. டெல்லியை வீழ்த்தி குஜராத் வெற்றி

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்கள்:

163 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணிக்கு, விரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அரம்பம் முதலே அதிரடியாக ஆடிய விரிதிமான் சாஹா 7 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் சேர்த்து இருந்தபோது, நோர்ட்ஜே பந்துவீச்சில் போல்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லும் 14 ரன்கள் எடுத்து இருந்தபோது, நோர்ட்ஜே பந்துவீச்சில் போல்டானார். அவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வெறும் 5 ரன்களில் கலீல் அகமது பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இம்பேக்ட் பிளேயர் விஜய் சங்கர்:

குஜராத் அணி 54 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். அவருடன் நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்ஷன், குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

குஜராத்தை மீட்ட தமிழர்கள்:

பொறுப்புடன் விளையாடியதுடன் சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும் விளாசிய சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் ஜோடி, 50 ரன்களை 39 பந்துகளில் சேர்த்தது. இதன் மூலம் 12வது ஓவரில் குஜராத் அணி 100 ரன்களை எட்டியது. பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி குஜராத் அணியை வெற்றியடைய செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 29 ரன்கள் எடுத்து இருந்தபோது மிட்சல் மார்ஷ் பந்துவீச்சில் விஜய் சங்கர் எல்பிடபள்யூ முறையில் அவுட்டானர்.இந்த ஜோடி 4வது விக்கெட்டிற்கு 53 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் 44 பந்துகளில், ஐபிஎல் வரலாற்றில் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மில்லர் அதிரடியாக 16 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்து குஜராத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி:

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்த குஜராத்தின் பந்துவீச்சை சமாளிக்க இரண்டு பேருமே திணறினர். இதையடுத்து, 5 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி உட்பட 7 ரன்களை சேர்த்து பிரித்வி ஷா விக்கெட்டை பறிகொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்சல் மார்ஷ் வெறும் 4 ரன்களை மட்டுமே சேர்த்து ஷமி பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

வார்னர் பொறுப்பான ஆட்டம்:

அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால் 37 ரன்களை சேர்ப்பதற்குள் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. இதைய்டுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். அதன்படி 7 பவுண்டரிகள் உட்பட 37 ரன்களை சேர்த்து இருந்த நிலையில், அவர் எதிர்கொண்ட 32வது பந்தில் அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் வார்னர் கிளீன் போல்டானார். அவரை தொடர்ந்து வந்த ரோஸ்ஸோ தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் அனார்.

டெல்லி நிதான ஆட்டம்:

5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய போரல்  2 சிக்சர்கள் உட்பட 20 ரன்கள் சேர்த்து இருந்தபோது, ரஷீத் கான் பந்துவீச்சில் போல்டானார். இதனிடையே, நீண்ட நேரமாக நிதானமாக விளையாடி வந்த ஷர்ப்ராஸ் கான் 30 ரன்களை எடுத்திருந்தபோது, ரஷீத் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுதார். இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய அக்ஸர் படேல் 36 ரன்களை சேர்த்தார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும்,  அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்,

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Embed widget