மேலும் அறிய

IPL 2023, DC vs CSK Playing XI: சென்னையில் டாப் 11 இவங்க தானாம்.. சி.எஸ்.கே - டெல்லியின் ப்ளேயிங் லெவன் இதோ..!

IPL 2023, DC vs CSK Playing XI: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறங்கும் வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.

கடந்த ஒன்றரை மாத காலமாக விறுவிறுப்பாக நடந்து வந்த ஐபிஎல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 66 போட்டிகள் நடந்துள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு மற்ற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனிடையே இன்று நடக்கும் 67வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இந்த சீசனில் கடைசி லீக் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் முடிக்கவே முயற்சி செய்யும். 

16-வது சீசனில் நடந்தது என்ன? 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, முடிவில்லா ஒரு போட்டி என மொத்தம் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியோ 13 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 8 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்தஜ் போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். அதே சமயம் தோற்றால் பிற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியதாக இருக்கும். 

இதுவரை நேருக்கு நேர்

இரண்டு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக டெல்லி - சென்னை அணிகள் இடையே நடந்த ஆட்டங்களில் சென்னை அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடப்பு சீசனில் சென்னையில் நடந்த போட்டியில் சென்னை அணி டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் யாருமே 25 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. அந்த அளவுக்கு டெல்லி அணி தனது சுழற்பந்து வீச்சால் சென்னை அணியை கட்டுப்படுத்தியிருந்தது. 

உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது டெல்லி அணிக்கு சாதகமான விஷயமாகும். மேலும் கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சென்னை அணியை டெல்லி பழிதீர்க்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி கேப்பிடல்ஸ் ப்ளேயிங் லெவன்: 

டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), ரிலீ ரோசோவ், யாஷ் துல், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே

சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்: 

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

இம்பேக்ட் ப்ளேயர்கள்:

சென்னை - மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, ஷேக் ரஷீத், ஆகாஷ் சிங்

டெல்லி - முகேஷ் குமார், பிருத்வி ஷா, பிரவீன் துபே, ரிபால் படேல் மற்றும் அபிஷேக் போரல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget