IPL 2023 CSK vs DC Playing XI: சென்னை - டெல்லி அணியில் நடந்த மாற்றம்.. இன்றைய போட்டியின் பிளேயிங் லெவன் இதுதான்..!
சென்னை - டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் பற்றி காணலாம்.
சென்னை - டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் பற்றி காணலாம்.
16வது ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடக்கும் 55வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் கணிக்கப்பட்டுள்ளது. காரணம் கடைசியாக சென்னை அணி இதே மைதானத்தில் மும்பை அணியுடன் மோதியது. அதில் சென்னை அணியே வெற்றி பெற்றது. அதேசமயம் பிளே ஆஃப் வாய்ப்பை நூழிலையில் உள்ள டெல்லி அணி வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள்
சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
டெல்லி அணி: டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் சர்மா
இரு அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் ஷிவம் துபேவுக்கு பதில் அம்பத்தி ராயுடு பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளார். இவர் கடந்த சில ஆட்டங்களில் Impact Player ஆக விளையாடியிருந்தார். அதேசமயம் டெல்லி அணியில் மணீஷ் பாண்டேவுக்கு பதில் லலித் யாதவ் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு ஆட்டத்தில் முடிவில்லை என 13 புள்ளிகளை பெற்றுள்ளது. டெல்லி அணி 10 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், அதில் ஒரு போட்டியில் மீண்டும் டெல்லி அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video: அடடா.. அஜித்தின் குரல் இப்படி மாறிவிட்டதா? - மிமிக்ரி செய்து அசத்திய காலா நடிகர்.. வைரலாகும் வீடியோ