IPL 2022, SRH vs PBKS: யூஸ் இல்ல.. இதுதான் கடைசிப்போட்டி! பஞ்சாப் வெற்றிப்பெற 158 ரன்கள் நிர்ணயித்தது ஹைதராபாத்!
கடைசி போட்டி என்பதால், ஆறுதல் வெற்றிப்பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காண இரு அணிகளும் போராடும்.
2022 ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லைஎன்பதால், கடைசி போட்டி என்ற காரணத்தால் நடந்து முடிய இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. இதில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் கேப்டனாக களமிறங்கினார். ஓப்பனிங் களமிறங்கிய ப்ரியம் ரக் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேற, மற்றொரு ஓப்பனரான அபிஷேக் ஷர்மா (43) சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார்.
அவரை அடுத்து வந்த பேட்டர்கள் ஓரளவு ரன் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராகுல் த்ரிபாதி (20), மார்க்கரம் (21), வாஷிங்டன் சுந்தர் (25), ரொமாரியோ (26*) ஆகியோர் ரன் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருக்கிறது. பஞ்சாப் பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, நாதன் எல்லீஸ், ஹர்ப்ரீத் பார் தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.
Innings Break!#SRH post a total of 157/8 on the board.#PBKS chase coming up shortly.
— IndianPremierLeague (@IPL) May 22, 2022
Scorecard - https://t.co/qbGsqixyd4 #SRHvPBKS #TATAIPL pic.twitter.com/PGEg5BYnrV
கடைசி போட்டி என்பதால், ஆறுதல் வெற்றிப்பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காண இரு அணிகளும் போராடும். இம்முறை டாப் நான்கில் நிறைவு செய்திருக்கும் குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் போட்டியிட உள்ளன.
ப்ளே ஆஃப் சுற்று அட்டவணை:
மே 24: குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
மே 25: எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
மே 27: குவாலிஃபையர் 2
மே 29: இறுதிப்போட்டி
தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத் திருவிழா | நேரலை https://t.co/dZVl82Ekl1
— ABP Nadu (@abpnadu) May 22, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்