IPL 2022, SRH vs PBKS: வெற்றியுடன் முடித்து கொண்ட பஞ்சாப்.. 6வது இடத்தைப் பிடித்தது!
இம்முறை டாப் நான்கில் நிறைவு செய்திருக்கும் குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் போட்டியிட உள்ளன.
2022 ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியின் முடிவால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்பதால், பெரிதாக எதிர்ப்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு வாய்ப்பு இருந்தது.
அதனை அடுத்து, இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. இதில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் கேப்டனாக களமிறங்கினார். ஓப்பனிங் களமிறங்கிய ப்ரியம் ரக் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேற, மற்றொரு ஓப்பனரான அபிஷேக் ஷர்மா (43) சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். அவரை அடுத்து வந்த பேட்டர்கள் ஓரளவு ரன் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
கடைசி போட்டி என்பதால், ஆறுதல் வெற்றிப்பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காண இரு அணிகளும் போரடின. ஆனால், சேஸிங் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஓப்பனர்கள் பேர்ஸ்டோ, ஷிகர் தவான் நல்ல தொடக்கத்தை தந்தனர். அவர்களை அடுத்து, ஷாரூக்கான் களமிறங்கி 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். மிடில் ஆர்டரில் இறங்கிய லியம் லிவிங்ஸ்டன் சிறப்பாக பேட்டிங் செய்து 49* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 15.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி போட்டியை கைப்பற்றியது பஞ்சாப் அணி.
That's that from Match 70 as @PunjabKingsIPL end their campaign on a winning note. Win by 5 wickets in 15.1 overs.
— IndianPremierLeague (@IPL) May 22, 2022
Scorecard - https://t.co/MmucFYpQoU #SRHvPBKS #TATAIPL pic.twitter.com/ujbQsZaUMz
ப்ளே ஆஃப் சுற்று அட்டவணை:
இம்முறை டாப் நான்கில் நிறைவு செய்திருக்கும் குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் போட்டியிட உள்ளன.
மே 24: குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
மே 25: எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
மே 27: குவாலிஃபையர் 2
மே 29: இறுதிப்போட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்