IPL 2022 Retention: மீண்டும் படைத்தலைவனான பண்ட்.. தளபதியாக அக்சர் பட்டேல்... டில்லியின் கில்லி லிஸ்ட்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் யார் யார்?

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில், ரிஷப்பண்ட், பிரித்விஷா, அக்ஷர் படேல், நோர்ட்ஜே ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ரிஷப்பண்ட்- 16 கோடி
அக்ஷர் படேல்- 9 கோடி
பிரித்விஷா- 7.5 கோடி
நோர்ட்ஜே - 6.5 கோடி
🚨 DELHI CAPITALS' RETENTIONS 🚨
— Delhi Capitals (@DelhiCapitals) November 30, 2021
Pause what you're doing and have a look at the DC Tigers who aren't going anywhere 💙
Read More 👉🏼 https://t.co/1b1s0awcrw#YehHaiNayiDilli #IPLRetention pic.twitter.com/FEOplhKUdh
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர்,ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்களை இந்த அணி ஏலத்திற்கு விட்டுள்ளது. அவர்களில் ஒருவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க இந்த அணி முயற்சிக்கும் என்று கருதப்படுகிறது. அடுத்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ, அகமதாபாத் அணிகளும் பங்கேற்க உள்ளதால் பல்வேறு வீரர்களும் புதிய அணிகளுக்கு மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படி 8 அணிகளும் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அளித்த பின்பு புதிய இரண்டு அணிகள் வீரர்களை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளும் 2 இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளுக்கும் டிசம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:சன்ரைசர்ஸ் மங்காத்தா: வில்லியம்சன்-அப்துல் சமாத்-உம்ரான் மாலிக் உள்ளே... ரஷீத் வெளியே!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

