IPL 2022 Memes: “வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா..” சென்னை, மும்பை ரசிகர்களை ஓடவிடும் ஐபிஎல் மீம்ஸ்
மும்பை அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், சென்னை மும்பை அணிகளை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
What a test knock from Vadapav Rohit Sharma 3 (12) 😭😭😭😭 pic.twitter.com/lSK20TB0GK
— :/ (@MSDhoniwarriors) April 6, 2022
ரோகித் சர்மா தலைமையிலான 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் மோதின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இரு வீரர்களும் ரன் எடுக்க திணறினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் 5 பந்துகள் மிச்சம் இருக்க 52 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் தன் பங்குக்கு மூன்று சிக்ஸர், ஒரு பௌண்டரி விரட்ட, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 38 ரன்களுடனும், பொல்லார்ட் 22 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
162 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியை கொல்கத்தா அணிக்கு வெற்றியை பரிசளித்தார் கம்மின்ஸ். பும்ரா வீசிய 15 ஓவரில் தலா, ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் விரட்ட, கொல்கத்தா அணிக்கு 30 பந்துகளில் 35 ரன்கள் தேவையாக இருந்தது. தொடர்ந்து, சாம்ஸ் வீசிய அடுத்த ஓவரில் 4 சிக்ஸர், 2 பௌண்டரியை பறக்கவிட்டு 14 பந்துகளில் அரைசதத்தை கடந்து கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்தார்.
இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 1 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. மும்பை அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், சென்னை மும்பை அணிகளை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
SRH, MI and CSK. pic.twitter.com/yVTmdQ7qLv
— Sai Theja (@csaitheja) April 4, 2022
CSK, MI and SRH in this IPL. pic.twitter.com/gfmMiXg5ju
— Sai Theja (@csaitheja) April 6, 2022
.@patcummins30 right now: #KKRvMI #IPL2022 pic.twitter.com/0IXQrH9UCF
— Wasim Jaffer (@WasimJaffer14) April 6, 2022
Patty 💥 #KKRvMI #KKRHaiTaiyaar
— Mr -GAURAV (@AvikGaurav) April 6, 2022
Fastest 50 in ipl by Pat Cummins
They prepared for Russell, Cummins came out of syllabus. 😂😂😂 pic.twitter.com/LevgsnplA4
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்