Maxwell: சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்து கற்று கொண்டேன் - மேக்ஸ்வேல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் மேக்ஸ்வேல் நேற்றைய போட்டியில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி அணி 173 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய சென்னை அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதில் குறிப்பாக பெங்களூரு அணியின் பந்துவீச்சில் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வேல் சிறப்பாக பந்துவீசி 2விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தன்னுடைய பந்துவீச்சு தொடர்பாக மேக்ஸ்வேல் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “எங்களுடைய பேட்டிங்கின் போது ஜடேஜா மற்றும் மொயின் அலி பந்துவீசியதை பார்த்த போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் இருப்பதை உணர்ந்தேன். அதன்பின்னர் நான் பந்துவீசும் போது அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதாவது பந்தை சரியாக ஸ்டெம்பிற்கு அருகே பிட்ச் செய்து ஸ்பின் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதனால் எனக்கு விக்கெட் கிடைத்தது.
RCB v CSK, Dressing Room Celebrations
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 5, 2022
The smiles and laughter returned & the players celebrated the win with the customary victory song. We also asked Maxi, Harshal, Siraj and the coaches about last night’s win against CSK.#PlayBold #WeAreChallengers #IPL2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/uW5hl7b4ko
நேற்றைய போட்டியில் எங்களுடைய அணி சிறப்பாக பந்துவீசியது. இதன்காரணமாக வெற்றி பெற்றது. தற்போது எங்களுடைய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசம் ஆக்கியுள்ளோம். இந்த முறை இந்த வெற்றி ஃபார்மை தொடர்ந்து வெளிப்படுத்தி முதல் நான்கு இடங்களை பிடித்து நிச்சயம் இறுதிப் போட்டி வரை செல்வோம்” எனக் கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது வரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 5 தோல்வியை பெற்றுள்ளது. தற்போது ஆர்சிபி அணி 4-வது இடத்தில் உள்ளது. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பெங்களூரு அணிக்கு சிறப்பாக உள்ளது. எனினும் அடுத்த 3 போட்டிகளில் 3 வெற்றி பெரும் பட்சத்தில் அந்த அணி ப்ளே சுற்றை உறுதி செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்