CSK vs RCB: ஆர்சிபி அணியை இரண்டாவது முறையாக வீழ்த்துமா சிஎஸ்கே..?- கை கொடுக்குமா தோனி கேப்டன்சி?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்ட உடன் சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் இன்று அதேபோல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியை மட்டும் பெற்றுள்ளது. ஆகவே இனிவரும் அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும். எனவே சிஎஸ்கே அணி தீவிரமாக முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது.
From the first time in 2008 to becoming a household emotion🥳! Here's to a lot more in Yellove!💛#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/ZJKvGOXGdo
— Chennai Super Kings (@ChennaiIPL) May 4, 2022
ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பொறுத்தவரை தற்போது வரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அடுத்து வர உள்ள 4 போட்டிகளில் 3ல் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு மிகவும் பிரகாசம் அடைந்துவிடும். ஏனென்றால் கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது. இதன்காரணமாக அந்த அணியின் ரன் ரேட் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. ஆகவே எஞ்சிய போட்டிகளில் ஆர்சிபி அணி நல்ல ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் கடைசி கட்டத்தில் அந்த அணிக்கு பலமாக அமையும்.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இன்னும் ஆர்சிபி, மும்பை,டெல்லி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் எஞ்சியுள்ளன. இவற்றில் அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டும். கடந்தப் போட்டியில் தோனி மீண்டும் அணிக்கு கேப்டனாக திரும்பியுள்ளது அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
அத்துடன் கடந்த போட்டியில் டேவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு கடந்தப் போட்டியில் 182 ரன்கள் விளாசியிருந்தனர். அதேபோல் இந்தப் போட்டியிலும் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்