IPL 2022: 'என் வீட்டு கன்னுக்குட்டி..' கோலி விக்கெட்டை எடுத்த சாஹல்! மீம்ஸ்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி பட்லரின் அதிரடியால் 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணியில் டூபிளசிஸ்(29), அனுஜ் ராவத்(26) ஆகியோர் மிகவும் வேகமாக ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் வந்த ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். நேற்றைய போட்டியில் விராட் கோலியை யுஸ்வேந்திர சாஹல் ஆட்டமிழக்க செய்தார். இதனால் இந்த விக்கெட் தொடர்பாக பலர் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். ஏனென்றால் 2014ஆம் ஆண்டு முதல் சாஹல் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். இந்தச் சூழலில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் சாஹலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இதன்காரணமாக 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்சிபி அணியில் விளையாடி கொண்டிருந்த சாஹல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Chahal running out Virat Kohli pic.twitter.com/WBbHIq25vG
— Sagar (@sagarcasm) April 5, 2022
When @imVkohli got out look at her reaction 😭😭😢😢 !! #RCBvsRR #RRvsRCB #RRvRCB #RCBvRR #Chahal #Kohli #RR #RCB #IPL #IPL2022 #ViratKohli pic.twitter.com/2QSNijcsdw
— Akash (@Raju_SSMB) April 5, 2022
#RRvsRCB
— 🅱🆄🅽🅽🆈🥳🌈 (@aakash_lakhia) April 5, 2022
Kohli watching chahal taking wickets against RCB : pic.twitter.com/fa8he6wdix
Virat Kohli and Yuji Chahal facing each other : pic.twitter.com/fxqSBUtGp7
— PrinCe (@Prince8bx) April 5, 2022
Dinesh Karthik #RCBvsRR #Kohli
— Hemant (@Sportscasmm) April 5, 2022
Yuzvendra Chahal in the RCB dressing room after they won the match: pic.twitter.com/HRx5FHrSjI
ஆகவே நேற்றைய போட்டியில் அவர் தனக்கு பிடித்த அணிக்கு எதிராக முதல் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்திருந்தார். இதனால் பலரும் சாஹல் தொடர்பான மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்